ரெஃப்லெசியா, புயா ரைமாண்டி 
பசுமை / சுற்றுச்சூழல்

உலகின் மிகப்பெரிய 9 பூக்கள் தெரியுமா?

ஆர்.ஐஸ்வர்யா

யற்கையின் படைப்பில் மிக அழகானவை பூக்கள். பல நிறங்களில் பலவிதமான வாசனைகளில் சிறியதும் பெரியதுமாய் கண்களையும் மனதையும் ஈர்க்கும் குணம் கொண்டவை. அரிதாக சில பூக்கள் அளவில் மிகப்பெரியதாய் தனித்துவமான வாசனையுடன் இருக்கும். அந்த வகையான பூக்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ரெஃப்லெசியா (Rafflesia arnoldii): இது மிகவும் பெரிய சைஸ் பூ. ஒரு மீட்டர் விட்டம் கொண்டது. இதிலிருந்து ஒரு அழுகல் வாடை வருகிறது. மகரந்தச் சேர்க்கைக்காக ஈக்களை ஈர்ப்பதற்காக அழுகும் இறைச்சியை போல வாசம் வீசுகிறது. அதனால் இது பிணப்பூ என்று அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் குறிப்பாக சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

2. புயா ரைமாண்டி (Puya raimondi): 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய பூ. இது உலகத்தின் மிக உயரமான பூவாகும். இது ஆண்டிஸ் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்த பூ பூக்க 80 முதல் 100 ஆண்டுகள் வரை ஆகும். ஆயிரக்கணக்கான வெள்ளைப் பூக்களுடன் முப்பதடி உயரத்தை எட்டும் இந்த மலர் கூர்முனை கொண்டது. இது பெரு மற்றும் பொலிவியாவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் காணப்படுகின்றன.

விக்டோரியா அமேசானிகா, ட்ரீ பியோனி

3. விக்டோரியா அமேசானிகா; (Victoria amazonica): இது பத்தடி வரை இலைகள் கொண்ட மாபெரும் நீர் லில்லி ஆகும். 12 அங்குள்ள விட்டம் கொண்ட பூக்களை கொண்டுள்ளது. வெள்ளை நிறத்திலிருந்து ஒரே இரவில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும் இந்தப் பூக்கள். பிரேசிலில் அமேசான் நதிப் படுகைகளில் காணப்படுகின்றன.

4. ட்ரீ பியோனி (Tree peony): இந்தப் பூக்கள் 10 அங்குலம்  வரை வளரக்கூடியவை. மிக அருமையான வாசனை தரும். இந்தப் பூக்கள் சீனாவில் காணப்படுகின்றன. சீன கலாசாரத்தில் செல்வத்தையும் மரியாதையும் இவை குறிக்கின்றன.

5. சூரியகாந்தி பூக்கள்: இது பெரிய அளவு மலராக இல்லாவிட்டாலும் இதனுடைய தலை பெரிதாக 12 அங்குலம் வரை இருக்கும். ஆயிரக்கணக்கான சிறிய பூக்களால் ஆனது. வட அமெரிக்கா மெக்சிகோ மற்றும்  இந்தியாவில் காணப்படுகிறது. இது 30 சென்டிமீட்டர் வரை விரியக்கூடியது. இதனுடைய மஞ்சள் நிற இதழ்கள் பார்க்க அழகாக இருக்கும்.

சூரியகாந்தி, மாக்னோலியா

6. மாக்னோலியா: அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான லூசியானா மற்றும் மிஸ்ஸிப்பி போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றன. அருமையான நறுமணம் கொண்ட வெள்ளை நிற பூக்கள் இவை. 12 அங்குலத்தில் உள்ளன. மகரந்த சேர்க்கைக்கு வண்டுகளை நம்பி தேனீக்கள் தோன்றுவதற்கும் முன்பே உருவான பழங்கால மலர்களாக மாக்னோலியாக்கள் கருதப்படுகின்றன. கிரீம் வெள்ளையிலும் பிங்க் நிற இதழ்களையும் கொண்டவை.

7. கேபேஜ் ரோசஸ்: முட்டைக்கோஸ் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இது முட்டைக்கோஸ் ரோஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் இதழ்கள் மிகவும் நெருக்கமாக பாக் செய்யப்பட்டது போல இருக்கும். பல அடுக்குகள் கொண்ட இதழ்கள் இருக்கும். 15 சென்டிமீட்டர் விட்டம் வரை இது மலரும். இதன் இனிதான நறுமணம் மிகவும் பிரசித்தி பெற்றது. பெர்ஃப்யூம் தயாரிக்க இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கேபேஜ் ரோசஸ், டைட்டன் ஆரம், டேலியா

8. டைட்டன் ஆரம் (Titan arum): இந்தப் பூ 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதிலிருந்து கெட்டுப்போன இறைச்சி வாடை வருகிறது. மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை ஈர்ப்பதற்காக இந்த மாதிரி வாடையை வெளியில் விடுகிறது. இவை இந்தோனேசியாவில் உள்ள சுமித்ரா தீவுகளில் காணப்படுகின்றன.

9. டேலியா: 10 அங்குல அகலம் வரை இவை இருக்கும். பலவிதமான வண்ணங்கள், வடிவங்களில் இவை வளர்கின்றன. சில டேலியா செடிகள் 20 அடி உயரம் வரை வளரக்கூடியவை. இதன் தாயகம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT