காலநிலை மாற்றத்தில் இருந்து பொருளாதாரத்தில் வலுவிழந்த நாடுகளை பாதுகாக்க அதிகம் நன்கொடை அளிக்கும் நாடுகளாக இந்தியா, சீனா உள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் பூமியில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை தடுப்பதற்காக துபாயில் காலநிலை மாநாடு 28 நடைபெற்று முடிந்திருக்கிறது. இம் மாநாட்டில் காலநிலை மாற்றத்தை தடுக்க பொருளாதார ரீதியாக முக்கிய பங்காற்றும் நாடுகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதள பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நிறுவனம் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தை தடுக்க உள்நாட்டு செயல்பாடுகளில் அரசாங்கங்கள் ஏற்படுத்திய மாற்றம் மற்றும் எல்லை கடந்த செயல்பாட்டிற்காகவும், பிற நாடுகளினுடைய நடவடிக்கைகளுக்கு பொருளாதார நன்கொடை அளித்துள்ள முக்கிய நாடுகளுடைய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இவ்வாறு சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வலுவிழந்து காணப்படும் நாடுகளுக்கு பொருளாதார ரீதியான உதவியை செய்து இருக்கின்றன. இவ்வாறு அளிக்கப்பட்ட நன்கொடையின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகள் காலநிலை மாற்றத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தங்கள் நாட்டு எல்லை பரப்பில் மேற்கொண்டு இருக்கின்றன.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உள்நாட்டில் அதிகம் செலவு செய்யும் நாடுகளாக இந்தியா, சீனா, பிரேசில், சவுதி அரேபியா, கனடா நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் சுமார் 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் செலவு செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி எடுத்து வருகின்றன.
மேலும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எதிர்கால கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் செலவு செய்து, முக்கிய பங்காற்றுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.