Litchi Fruit 
பசுமை / சுற்றுச்சூழல்

லிச்சி பழ மரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா!

ரா.வ.பாலகிருஷ்ணன்

உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் பழங்களுக்கு முக்கியப் பங்குண்டு. சந்தையில் பழங்களுக்கு என்று தனி மவுசு உண்டு. அவ்வகையில் சமீப காலமாக லிச்சி பழத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லிச்சி பழத்தைப் பற்றிய அரிய தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். 

சீனாவைப் பூர்விகமாக கொண்ட லிச்சி பழ மரங்கள், சுமார் 2,000 வருடங்களுக்கும் மேலாக பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பிரதான பழ வகைகளுள் ஒன்றாக வளர்க்கப்பட்டு வருகிறது. லிச்சி பழ மரம் சாப்பின்டேஸி (Sapindaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர்‌ லிச்சி சைனீசிஸ் (Litchi chinensis) ஆகும். லிச்சி பழ உற்பத்திக்கு பெயர் போன சில இடங்களில், ஆண்டுதோறும் இப்பழத்தைக் கொண்டாடுவதற்காகவே திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன என சொல்லப்படுகிறது. அப்போது லிச்சி பழத்தை மையமாகக் கொண்ட சமையல் போட்டிகள், விவசாயக் கண்காட்சிகள் மற்றும் கலாச்சார நடிவடிக்கைகளும் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.

பழத் தோற்றம்:

லிச்சி பழங்கள் வட்ட வடிவில் சிறியதாக இருக்கும். இதன் தோல் அமைப்பு பலாப்பழத்தினைப் போன்று சிறிது கரடு முரடாகவே இருக்கும். பழங்கள் பழுத்த பிறகு சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். லிச்சி பழங்கள் நல்ல மணத்துடன் இனிப்புச் சுவையைக் கொண்டுள்ளன. தோலை உரித்தவுடன் ஜூஸி போன்ற சதை அமைப்புடன் காணப்படும். மேலும் இதன் சதைப்பகுதி பார்ப்பதற்கு திராட்சை போன்றும் இருக்கும்.

மரத் தோற்றம்:

அடர் பச்சை நிறத்தில் இலைகளைக் கொண்ட லிச்சி பழ மரங்கள், சுமார் 40 முதல் 50 அடி உயரம் வரை வளரக் கூடியது.

ஊட்டச்சத்துக்கள்:

லிச்சி பழத்தில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் வைட்டமின் சி, பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகளவில் அடங்கியுள்ளன. மேலும் இப்பழம் ஆக்ஸிஜனேற்றங்களையும், சிறிய அளவில் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளன.

சாகுபடி:

வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலைகளில் லிச்சி பழ மரங்கள் நன்றாக செழித்து வளரக் கூடியவை. இம்மரத்தின் வளர்ச்சிக்கு நன்றாக வடிகட்டிய மண் மற்றும் முழு சூரிய வெளிச்சம் தேவை. மரங்கள் வளரும் பருவத்தில் தேவையான அளவு நீர்ப்பாசனம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அறுவடை:

லிச்சி பழங்கள் முழுமையாக முதிர்ச்சி அடைந்த பின்னரே அறுவடை செய்யப்படுகின்றன. இம்மரங்கள் பயிரிடப்படும் பிராந்தியத்தைப் பொறுத்து கோடை காலமான மே மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்‌.

மருத்துப் பலன்கள்:

பாரம்பரியம் மிகுந்த சீன மருத்துவத்தில் லிச்சி பழங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பழங்கள் தொடர் இருமலைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தைத் தூண்டவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும் லிச்சி பழம் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

லிச்சி பழங்கள் இப்போது உள்ளூர் சந்தைகளில் கூட மிக எளித்க கிடைப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT