Fruits and vegetables 
பசுமை / சுற்றுச்சூழல்

இந்தியாவில் குறைவாக உண்ணப்படும் காய் மற்றும் பழ வகைகள்!

A.N.ராகுல்

பல வகையான சமையல் பாரம்பரியங்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சல்களை தன் நிலப்பகுதியில் கொண்டுள்ளது இந்தியா. இருப்பினும், சில சத்தான பொருட்கள் பெரிதும் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் இருக்கின்றன. அதேநேரம் பொது மக்களிடையேயும் குறைந்த அளவில் பிரபலமாக உள்ளன. அப்படி இந்தியாவில் குறைவாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறைவாக பயன்படுத்தப்படும் காய்கறிகள்:

Sponge Gourd (Luffa):

Luffa என்று அழைக்கப்படும் Sponge Gourd பெரும்பாலும் இந்திய சமையலறைகளில் காணப்படாத காய் வகை. அதன் தனித்துவமான அமைப்பு மற்றும் சற்று கசப்பான சுவை குறைவான பயன்பாட்டிற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் இதில், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, ஜிங்க் (Zinc) மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் (Minerals) நிறைந்துள்ளன. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவி செய்கின்றன.

Ivy Gourd (Coccinia):

இது ஐவி அல்லது குண்ட்ரு (Kundru) இது அதிகம் பயன்படுத்தப்படாத மற்றொரு காய். அதன் சிறிய அளவு மற்றும் சுமாரான சுவை அதன் குறைந்த பிரபலத்திற்கு காரணமாகும். இருப்பினும், ஐவி காயில் ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants), வைட்டமின்கள் பி, சி, கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது.

பாயிண்ட் கோர்ட் (Pointed Gourd):

பாயிண்ட் கோர்ட் 'பர்வால்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் பல இந்திய வீடுகளில் பெரும்பாலும் காணப்படுவதில்லை. அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் அதற்கான தயாரிப்பு முறைகள் போன்றவற்றால் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இருப்பினும், இது வைட்டமின்கள் ஏ, சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. எலக்ட்ரோலைட்டின் (Electrolyte) சமநிலையை பராமரிக்கின்றன.

குறைவாக பயன்படுத்தப்படும் பழ வகைகள்:

ஜாமூன் அல்லது இந்திய பிளாக்பெர்ரி (Blackberry):

இது ஒரு பருவகால பழமாகும். அதன் துவர்ப்பு சுவை மற்றும் குறைந்த அளவு கிடைப்பது போன்ற காரணங்களால் மக்களிடையே குறைவான பயன்பாட்டில் இருக்கலாம்.

ஜாமூனில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் (Antioxidants) நிறைந்துள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து (Oxidative Stress) பாதுகாக்கவும் உதவுகிறது.

Bael பேல், அல்லது மர ஆப்பிள்:

இது பரவலாக அனைவராலும் உட்கொள்ளப்படாத மற்றொரு பழம். அதன் கடினமான ஷெல் (வெளிப்புறம்) மற்றும் தனித்துவமான சுவை சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இருப்பினும், பேல் பழம் மிகவும் சத்தானது. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, நார்ச்சத்து மற்றும் டானின்கள் (Tannins) உள்ளன. இது செரிமானத்திற்கும், இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகளுக்கும் (Gastrointestinal) சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

கரோண்டா Karonda அல்லது கரிசா:

இது பெரும்பாலும் உண்ணப்படாத ஒரு சிறிய புளிப்பு பழமாகும். அதன் புளிப்பு சுவை மற்றும் குறைந்த அளவிலான விற்பனை பயன்பாடுகள் போன்றவை அதன் குறைந்த பிரபலத்திற்கு பங்களிக்கின்றன. இருப்பினும், கரோண்டாவில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் (Antioxidants) நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சோகையை தடுக்கவும் உதவுகிறது.

இந்த காய்கறிகள் மற்றும் பழங்களின் குறைந்த பயன்பாட்டிற்கான முதன்மைக் காரணங்கள் அவற்றின் தனித்துவமான சுவைகள், தோற்றங்கள் (Textures), அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் சமையல் பயன்பாடுகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது அவற்றின் குறைவான பயன்பாட்டுக்கு முக்கிய பங்களிக்கிறது.

எடை குறையணுமா? இந்த ரெசிபிகளை டிரை பண்ணுங்க..!

மனிதர்களின் பசி, தூக்கத்திற்குக் காரணமான ட்ரிப்டோஃபனின் நன்மைகள்!

நடைப்பயிற்சியை சுவாரசியமாக மாற்றும் 6-6-6 விதி!

அல்டிமேட் டேஸ்டில் பஞ்சாபி சமோசா - சேமியா கேசரி ரெசிபிஸ்!

புவிசார் குறியீடு பெற்றுள்ள எறும்பு சட்னியின் பாரம்பரியம் தெரியுமா?

SCROLL FOR NEXT