- பி.ஆர்.லட்சுமி
நமது பூமி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே தோன்றியுள்ளது. ஐம்பூதங்களால் மக்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.
கற்காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை சூரியனை ஆராய்ச்சி செய்யும் அளவு மனிதர்கள் தயாராகி விட்டனர்.
நிலமும், நீரும், காற்றும் சூரியனும், நிலவும் எங்கு சொல்கிறதோ அங்குதான் செல்லும். அதைப் பணித்து இங்கு செல் என கட்டளையிட இயற்கை நமக்கு கற்றுத் தரவில்லை.
தூய காற்று பெற நல்ல இல்லம், அகண்ட தெருக்கள், கழிவுநீர் வசதியுடன் நிறைந்த நல்ல நகரம், கிராமங்கள் அமைந்த நாடுதான் இன்றைய மக்களுக்கு அவசியம். அதிக மழையால் பாதிக்கப்பட்டு தெருக்கள்தோறும் தொங்கிக்கொண்டிருக்கின்ற கருப்பு வயர்களுடன் போராடி வண்டி சக்கரங்களுடன் மாட்டி கீழே விழுந்து கை, கால் பாதிக்கப்பட்டு எத்தனை நாள் அவஸ்தைப்படுவது? அடைத்துக் கொண்டிருக்கும் கழிவுநீர் சாக்கடை நாற்றத்தால் பாதிக்கப்பட்டு இனியும் எத்தனைநாள் மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டே இருக்க முடியும்?
பொன் விளையும் விவசாய நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு 3 வேளை உணவு இருக்க இடம் பத்தாயிரம் சம்பளம் என்றவுடன் குடும்பத்தைக் கிராமங்களில் விட்டுவிட்டு நகர்ப்புறங்களுக்கு வேலைக்கு வந்துவிடுகின்றனர். ஐடி படித்த மக்களும் தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு வெவ்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
2010களில் கணினி வளர்ச்சி பெற்றபிறகு கடலடி வளத்தில் பல்வேறு நாடுகளும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. கடலடி வளத்தில் கவனம் செலுத்தும் நாடுகள் ஏன் பசுமை சமுதாயத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது புரியவில்லை! அளவுக்கு அதிகமான மழை செயற்கையாக உருவாக்கப்படுகிறது எனத் தெரிந்தும் உலக நாடுகள் பலவும் ஏன் அதைத் தடுக்க முன்வரவில்லை என்பது புரியாத புதிர். ஒரு நாட்டை அழித்து மற்றொரு நாட்டில் தொழில்வளமும், பிற வளங்களும் உருவாக்கப்படவேண்டும் என்பது உலகச் சட்டப் புத்தகத்திலேயே கிடையாது.
அப்படியிருக்கும்போது தனி மனிதனின் வாழும் உரிமையைக் காப்பாற்ற மக்கள் இனி என்ன செய்யவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செயலாற்றவேண்டும்.
தேவையற்ற அறிவியல் கருவிகளை வீட்டில் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கைக்கு உகந்த காற்றோட்டமான சூழலில் வாழப் பழகவேண்டும்.
விவசாய நிலங்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்
நம்மாழ்வார் காட்டிய வழியில் விவசாயத்தை வழி நடத்த உதவ வேண்டும்.
மொபைலில் வரும் தேவையற்ற குறுஞ்செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நேரிடையாகப் பொருட்களை வாங்கி வரவேண்டும்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சுற்றுப்புறச் சூழலைக் கெடுப்பவராக இருந்தால் அரசிடம் புகார் அளிக்கலாமே!