Why Cyclones make Chennai miserable?
Why Cyclones make Chennai miserable? 
பசுமை / சுற்றுச்சூழல்

சென்னையை துவம்சமாக்கும் புயல்கள். ஓ! இது தான் காரணமா?

கிரி கணபதி

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு துடிப்பான நகரம்தான் சென்னை. இது வேகமாக வளர்ந்து வரும் நகர்புற நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும் கடந்த சில வருடங்களில் புயலால் மற்ற மாவட்டங்களை விட சென்னை அதிகம் பாதிக்கப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல்கூட சென்னையை துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

புயல்களின் தாக்கத்தால் சென்னை மட்டும் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறது? சரி, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சென்னையின் புவியியல் கட்டமைப்பு.

வங்காள விரிகுடாவை ஒட்டிய சென்னையின் புவியியல் நிலை காரணமாக வளைகுடாவில் உருவாகும் சூறாவளிகளுக்கு எளிதில் இரையாகிறது. அதாவது, சென்னை கடலுக்கு மிகவும் அருகாமையில் உள்ளது என்பது முதல் காரணம். அடுத்ததாக சென்னையின் நிலப்பரப்பு மிகவும் தட்டையானது. பெரும்பாலும் எல்லா இடங்களும் ஒரே மாதிரியான அளவில் இருப்பதால், சூறாவளியின் தாக்கம் எளிதில் ஊடுருவி பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது. 

பருவ மழை காலங்களில் உருவாகும் சூறாவளிகள் நகர்ந்து சென்று தாக்குவதற்கு ஏதுவான இடத்தில் சென்னை அமைந்துள்ளது. இது அதிக மழைப்பொழிவை எதிர் கொண்டு, வெள்ளம் மற்றும் நீர்நிலை சார்ந்த பிரச்சனைகளை அதிகரிக்கிறது. 

நகரமயமாக்கல் மற்றும் உட்கட்டமைப்பு சவால்கள்

சென்னையில் ஏற்படும் விரைவான நகரமயமாக்களால் அதன் வடிவால் அமைப்பை கேள்விக்குறியாகிறது. சூறாவளிகள் அதிக மழைப் பொழிவை கொண்டு வரும்போது, நகரத்தின் வடிக்கால் அமைப்பு நீரை வெளியேற்றும் அளவுக்கு போதிய திறனுடன் இல்லாமல் இருப்பதால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடுகிறது. 

ஆனால் ஒரு நாள் மழையைக் கூட சென்னையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பது மிகவும் மோசமான நிலைதான். இதை இப்போதே கருத்தில் கொண்டு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இத்தகைய புயல்களால் வரும் பாதிப்புகளில் இருந்து சென்னை பாதுகாப்பாக இருக்க முடியும். 

இந்த மிக்ஜாம் புயலின் பாதிப்புகளை நேரில் பார்த்த பிறகாவது, முறையான உட்கட்டமைப்பு வசதிகளையும், வடிகால் அமைப்புகளையும் அரசு சீர்படுத்தும் என நம்புவோம்.

உலகின் முதல் தங்க சிவலிங்க கோயில்!

சிதம்பர குஞ்சிதபாதம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

உங்களது வயதைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? 

ஹன்சிகாவா இது? காந்தாரி பட புது அப்டேட் வெளியீடு!

முதல் நாளே வசூலில் பட்டைய கிளப்பிய சூரியின் கருடன்... எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT