Rhinoceros https://www.istockphoto.com
பசுமை / சுற்றுச்சூழல்

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வேகமாக அழிந்து வரும் விலங்கினங்களில் காண்டாமிருகமும் ஒன்று. இவை ஆப்பிரிக்கா, இந்தியா, சுமித்ரா, ஜாவா தீவுகளில் மட்டுமே காணப்படும் விலங்காகும். இந்தியாவில் வாழும் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பை கொண்டது. ஆப்பிரிக்கா காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகள் உண்டு.

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைக்கு அடுத்து காண்டாமிருகம்தான் பெரிய உயிரினமாகும். காண்டாமிருகங்களில் ஐந்து வகைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை, ஒற்றைக் கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா என ஐந்து வகைகள் உள்ளன. எல்லா வகையான காண்டாமிருகமும் ஆயிரம் கிலோ எடைக்கும் அதிகமானது.

இவை ஆறடி உயரம் வரை வளரக்கூடியது. சராசரியாக 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. இவற்றின் தோல் மிகவும் தடிமனானவை.1.5 முதல் 5 சென்டி மீட்டர் வரை தடிமனாக இருக்கும். காண்டாமிருகத்தின் கர்ப்ப காலம் 15 முதல் 16 மாதங்களாகும். பிறக்கும் காண்டாமிருகக் கன்றானது 40 முதல் 64 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும்.

தாவர உண்ணிகளான இவை இலை, தழைகளையும், புற்களையும் உண்டு வாழும். இதன் கொம்புகள் மண்ணை தோண்டுவதற்கும், கிழங்குகளை மண்ணுக்கு அடியிலிருந்து எடுப்பதற்கும், எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்தும். உலக அளவில் தந்தத்துக்கு நிகரான அளவு விலை கிடைப்பதால் காண்டாமிருகங்கள் அதன் கொம்பிற்காக வேட்டையாடப்படுகின்றன.

காண்டாமிருகத்தின் மூளை 400 கிராம் முதல் 600 கிராம் எடை கொண்டதாக மிகவும் சிறிய அளவில் இருக்கும். உலகத்தில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு அஸ்ஸாமில் உள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் உள்ளது. ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும். தண்ணீர் போல இருக்கும் இந்த பாலில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT