Coccosaurus.
Coccosaurus. 
பசுமை / சுற்றுச்சூழல்

டைனோசர் வயிற்றில் ஒளிந்திருந்த ரகசியம்!

கிரி கணபதி

டைனோசர் என்ற பிரம்மாண்ட உயிரினத்தை ஜுராசிக் பார்க், ஜுராசிக் வேர்ல்ட் போன்ற திரைப்படங்கள் நம் கண் முன்னே காட்டி மிரளச் செய்ததை யாரும் மறக்க முடியாது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த உயிரினங்கள் தங்களுக்குள் எண்ணற்ற ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளது. 

இப்படிதான் சமீபத்தில் கோகோசோரஸ் என்ற ட்ரைனோசரை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. சுமார் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக பாறையில் புதைந்திருந்த கோகோசோரஸ், T-Rex இனத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது இருந்த புதைப்படிவத்தில் வேறு ஒரு புதிய எச்சங்களும் மறைந்திருந்தன. 

அதாவது புதைப்படிவத்தில் உள்ள ட்ரைனோசரின் விளா எலும்புகளுக்கு இடையே சிறிய வகை டைனோசரின் கால் எலும்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அந்த எச்சங்கள் கோகோசோரஸின் உணவின் மிச்சங்கள் என்பதை கண்டறிந்தனர். தொடக்கத்தில் விஞ்ஞானிகளால் இதை உறுதி செய்ய முடியவில்லை என்றாலும், அதை வரைபடமாக மாற்றி கணினியில் பார்க்கும்போது, அது டைனோசரின் எச்சங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதில் காணப்படும் சிறிய கால்கள் ‘சிட்டிக்ஸ்’ எனப்படும் சிறிய வகை பறவை போன்ற டைனோசரின் கால்களாகும். இதன் மூலமாக இளம் கோகோசோரஸ் எப்படி தனது இறையை வேட்டையாடி பாதியாக கடித்து உண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது. ட்ரைனோசரஸ் தங்களின் உணவு முறையில் எந்த அளவுக்கு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது. 

இளம் ட்ரைனோசரஸ்கள் சுறுசுறுப்பாக வேட்டையாடும் தன்மையுடனும், மெல்லியதாகவும், மிகக் கூர்மையான பற்களுடனும் இருந்துள்ளன. அதே நேரம் மிகப் பெரிய T-Rex மற்றும் கோகோசோரஸ் போன்றவை மெதுவாக செயல்படும் சக்தி வாய்ந்த விலங்காக இருந்துள்ளது. புதைப்படிவங்கள் வாயிலாக ட்ரைனோசரஸ் மிகவும் சிக்கல் நிறைந்த நுணுக்கமானவை என்பதை அறிய முடிகிறது. 

அவை வளர்ந்த பிறகு தங்களை மாற்றிக்கொண்டு செயல்படும் அளவுக்கு திறமையானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்... இந்தியன் 3 ரிலீஸ் தேதியும் அறிவிப்பு... எப்போது தெரியுமா?

சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்... ரீ-ரிலிசாகும் சூப்பர் படம்!

பாட்டிகளின் கஜானா சுருக்கு பை பற்றி தெரியுமா?

உங்கள் தைரியத்தை உங்களுக்கு உணர்த்தும் 5 உன்னத விஷயங்கள்

செட்டிநாடு ஸ்டைலில் பாசிப்பருப்பு அல்வா செய்யலாம் வாங்க! 

SCROLL FOR NEXT