healthy sweets 
உணவு / சமையல்

வீட்டில் செய்யக்கூடிய சுவையான 11வகை ஆரோக்கியமான இனிப்புகள்!

கலைமதி சிவகுரு

ண்டிகைகள் முதல் சிறப்பு நிகழ்ச்சி வரை இனிப்புகள் சாப்பிடுவது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும் எளிதான முறையில் வீட்டிலே செய்வது மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடியது.

1 பழ சாட்: ஃப்ரூட் சாட் என்பது புத்துணர்ச்சியூட்டும், மற்றும் ஆரோக்கியமான இனிப்பு சிற்றுண்டி. ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, மாதுளை போன்ற பழங்களை நறுக்கி ஒன்றாக சேர்த்து ஒரு சிட்டிகை கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் ஒரு துளி தேன் சேர்க்கவும். விரைவாக செய்ய கூடிய எளிதான இனிப்பு ஆகும்.

2 தேங்காய் பர்ஃபி: தேங்காய் துருவல் மற்றும் அமுக்கப்பட்ட பாலில் செய்யப்பட்ட ஒரு இனிப்பு. இவற்றை ஒன்றாக கலந்து கெட்டியாகும் வரை சமைக்கவும். பின்னர் சதுரங்கள் அல்லது அறுகோணமாக வெட்டவும். மகிழ்ச்சிகரமான சுவை மிகுந்த இனிப்பு தயார்.

3 டில் லடூ: டில் லடூ என்பது வறுத்த எள் மற்றும் வெல்லத் தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு வறுத்த எள்ளை இடித்து திரண்ட கலவையை உருண்டைகள் செய்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லட்டு செய்யலாம். மகர சங்கராந்தி பண்டிகையின்போது அவை மிகவும் பிரபலமாக உள்ளன.

4 செவியன் கீர்: செவியன் கீர் என்பது பால் மற்றும் சர்க்கரையில் சமைத்து ஏலக்காய் சேர்த்து உலர்ந்த பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு இனிப்பு.

5 அரிசி கீர்: இது ரைஸ் கீர், ரைஸ் புட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது. இது அரிசி, பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் போன்ற நறுமண மசாலாப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கிரீமி இனிப்பு ஆகும். விஷேச காலங்களிலும் குடும்பக் கூட்டங்களின் போதும் எளிதாக செய்யலாம்.

6 லௌகி கீர்: லௌகி கீர் என்பது துவரம்பருப்பு பால் மற்றும் சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தனித்துவமான இனிப்பு ஆகும். இந்த இனிப்பு புத்துணர்ச்சி ஊட்டும் சுவைகொண்ட ஆரோக்கியமான இனிப்பு.

7 சூஜி ஹல்வா: ரவை அல்வா என்று அழைக்கப்படும் சூஜி அல்வா, ரவை, நெய்,சர்க்கரை மற்றும் தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் பிரபலமான இந்திய இனிப்பு ஆகும். இதன் மேல் பகுதியில் கொட்டைகள் மற்றும் திராட்சைகள் கொண்டு அலங்கரிக்கலாம்.

8 முந்திரி பர்ஃபி: முந்திரியை பொடியாக்கி சர்க்கரை பாகு கலந்து அத்துடன் முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து கிளறி கெட்டியானதும் இறக்கி தட்டில் நெய் தடவி அதில் கொட்டி துண்டுகள் போட்டால் நாவை சுண்டி இழுக்கும் இனிப்பு ரெடி

9 உக்கரை: செட்டி நாட்டில் தீபாவளியின்போது வழங்கப்படும் ஒரு பிரபலமான இனிப்பு. இது வேக வைத்த பச்சை பயிறு மற்றும் வெல்லம் தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றால் செய்யப்படும் இனிப்பு ஆகும்.

10 பணியாரம்: ஒருவர் இனிப் பின் மீது ஆசைப்படும் போது இது ஓர் விரைவான இனிப்பு சிற்றுண்டி. வெல்லம் சேர்த்து இட்லி மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

11 வெர்மிசெல்லி கீர்: பால் மற்றும் வெர்மிசெல்லி இழைகளால் செய்யப்பட்ட ஒரு ருசியான இனிப்பு. இது சேமியா நெய்யில் வறுக்கப்பட்டு அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய் தூள், கிஸ்மிஸ், முந்திரி, பாதாம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு ஆகும்.

இவை அனைத்தும் பலவிதமான சுவைகள், பல்வேறு சமையல் நுட்பங்கள், மற்றும் மகிழ்ச்சியான உணவு பழக்கங்களை வழங்குகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT