Healthy dosai recipes Image credit - hyderabadiruchulu.com
உணவு / சமையல்

ஆரோக்கியம் மிகுந்த முத்தான 3 வகை தோசைகள்!

எஸ்.மாரிமுத்து

மரவள்ளிக் கிழங்கு தோசை:

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - ஒரு கப், மரவள்ளி கிழங்கு ஒன்று காய்ந்த மிளகாய் -ஐந்து சீரகம் -ஒரு ஸ்பூன் பெருங்காயம் – சிறிது உப்பு -தேவைக்கு எண்ணெய் -தேவைக்கு

செய்முறை:

மரவள்ளி கிழங்கை சிறு துண்டுகளாக்கி பால் போக கழுவி வைக்கவும். புழுங்கல் அரிசியை கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும். மிளகாய் உப்பு, பெருங்காயம், சீரகம், சேர்த்து அரைத்து கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின் ஊறிய அரிசியையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.

ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்து தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு எண்ணெய் ஊற்றி சிவக்க வெந்ததும் எடுக்கவும். ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு தோசை ரெடி. தக்காளி, வெங்காய சட்னி தொட்டுக்க நல்ல காம்பினேஷன்.

சோயா தோசை:

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

காய்ந்த சோயா - 2 டேபிள் ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு - 2  டேபிள் ஸ்பூன்.

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

சின்ன வெங்காயம் - 8

பச்சை மிளகாய் - 2

செய்முறை:

அரிசி, சோயா, உளுத்தம் பருப்பை கழுவி தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியாக நன்றாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும். முதல் நாள் அரைத்து மறுநாள் பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் கலக்கி  தோசைக்கல்லில் ஊற்றி மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும்  மொறு மொறுவெ ஊற்றி எடுக்கவும். சத்தான சோயா தோசை ரெடி. தேங்காய் சாப்பிட ருசி அள்ளும்.

பீட்ரூட் ராகி தோசை:

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு -ஒரு கப்

உப்பு -தேவைக்கு 

அரைத்த உளுத்தம் பருப்பு மாவு - கால் கப்.

துருவிய பீட்ரூட் - கால் கப்

பச்சை மிளகாய் - 3

கடுகு - சிறிது

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

ராகி மாவுடன் அரைத்த உளுத்தம்பருப்பு மாவு, உப்பு  தண்ணீர் சேர்த்து கலக்கி 8 மணி நேரம் கழித்து  பொங்கியவுடன் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பீட்ரூட் துருவல் சேர்த்து தாளித்து மாவில் கலந்து தோசைக்கல்லில் ஊற்றி மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வெந்தவுடன்  எடுக்கவும்.

சத்தான பீட்ரூட் ராகி தோசை ரெடி. வெங்காயம், புதினா, கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட ருசி அள்ளும். இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அனைவரும். செய்து பாருங்கள் அசத்துங்கள்.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT