உணவு / சமையல்

5 மினிட் ரெசிபிஸ்!

ஆர்.சாந்தா

வேஃபர் பால்ஸ்

தேவை:  1 பாக்கெட் பிஸ்கெட், 2 தேக்கரண்டி கன்டென்ஸ்டு மில்க், 1 தேக்கரண்டி கோகோ பவுடர், 2 – 3 தேக்கரண்டி தேங்காய்த் துருவல், 2 தேக்கரண்டி க்ரீம்.

செய்முறை: மிக்ஸியில் தேங்காய்த் துருவல் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் பிளெண்ட் செய்து, இதை 1 -2 நிமிடம் வரை ஒருநான்ஸ்டிக் பேனில், மிதமான தீயில் வறுத்து, சிறு சிறு உருண்டைகளாக்கி தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்து சர்வ் செய்யவும்.

சீஸி ஜுகினி காயின்

தேவை: 2 தேக்கரண்டி துருவிய சீஸ், ½ கப் மைதா, ½ கப் ஓட்ஸ் மாவு, ½ வெங்காயம் (பொடியாக நறுக்கியது), ½ குடை மிளகாய் (பொடியாக நறுக்கியது), 1 ஸ்பூன் மிளகுத் தூள், 1 ஜுகினி ஸ்லைஸ், எண்ணெய், உப்பு.

செய்முறை: ஓட்ஸ் மாவு, மைதா, உப்பு, சீஸ் இவைகளைக் கரைசலாக்கி காய்கறிகள் சீஸை சேர்த்துக் கலக்கி, இதில் ஜுகினி ஸ்லைஸ்களைத் தோய்த்தெடுத்து, டீப் ஃப்ரை செய்யவும். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

சாக்கோ க்ரீம் பனானா கஷி

தேவை: 1 தேக்கரண்டி கோகோ புவடர், 2 தேக்கரண்டி க்ரீம், 3 தேக்கரண்டி கன்டென்ஸ்டு மில்க், 8 – 10 ரோஸ்ட் பாதாம், 1 ரெடிமேட் டார்டிலா, 1 வாழைப்பழம்.

செய்முறை:  ஒரு வாணலியில் கண்டென்ஸ்டு மில்க், கோகோ பவுடர், க்ரீம் சேர்த்து 1 – 2 நிமிடம் சுடவைத்து, சாஸ் ஆக்கி டார்ட்டிலா மீது பூசி நடுவில் வாழைப்பழத்தை வைத்து ரோல் செய்து, துண்டுகளாக்கி பாதாம் வைக்கவும்.

க்ரிஸ்பி ஆலுபால்ஸ்

தேவை: 2 வேக வைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம் 1, 1 பச்சை மிளகாய், கோத்துமல்லி பொடியாக நறுக்கியது; 1 தேக்கரண்டி மைதா (கரைத்தது), 2 – 3 தேக்கரண்டி அவல் (லேசாகப் பொடித்தது), உப்பு, எண்ணெய்.

செய்முறை: உருளைக்கிழங்கை மசித்து, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக்கி, மைதா மாவு கரைசலில் தோய்த்தெடுத்து, அவலில் புரட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து, சட்னியுடன் சர்வ் செய்யவும்.

ப்ரெட் பேடா பவுச்

தேவை: 4 – 5 ப்ரெட், 5 – 6 பேடா, 1- 2 தேக்கரண்டி பாதாம், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் (பொடியாக நறுக்கியது), 1 – 2 தேக்கரண்டி வெண்ணெய், சிறிது சாக்லேட் சாஸ்.

செய்முறை: ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி, சப்பாத்தி போல் திரட்டி, பேடாக்களை உதிர்த்து அதில் நட்ஸ் கலந்து, ப்ரெட்டின் நடுவில் வைத்து, தண்ணீர் தடவி பவுச் ஆக்கி, பொன்னிறமாக வறுத்தெடுத்து சாக்லேட் சாஸுடன் பரிமாறவும்.

கார்ன் ஃப்ளேக்ஸ் களஸ்டர்ஸ்:

தேவை: 1 கப் கார்ன்ஃப்ளேக்ஸ், ¾ கப் வெல்லம், 2 தேக்கரண்டி பாதாம் வறுத்தது, 2 தேக்கரண்டி கிஸ்மிஸ், 1 தேக்கரண்டி க்ரீஷ்.

செய்முறை: வெல்லப் பாகு செய்து, இதில் 1 தேக்கரண்டி க்ரீம் கலக்கவும். கார்ன் ஃப்ளேக்ஸ், பாதாம் மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து, நெய் தடவிய பாத்திரத்தில் ஸ்பூனால் கிளஸ்டர்ஸ் செய்து சர்வ் செய்யவும்.

ஃப்ரூட் அண்டு நட்ஸ் ஐஸ்க்ரீம் கோன்:

தேவை: 3-4 ஐஸ்க்ரீம் கோன், 1 கப் நறுக்கிய பழங்கள், 2 -3 தேக்கரண்டி உலர் பழ வகை (முந்திரி, திராட்சை, அக்ரூட், பாதாம்) பொடியாக நறுக்கியது. 4 – 5 தேக்கரண்டி ஹங்கர்டு; 1 -2 தேக்கரண்டி சர்க்கரை (பொடித்தது).

செய்முறை: பழங்கள், தயிர், சர்க்கரை ஆகியவற்றைக் கலக்கி இதைக் கோன்களில் நிரப்பி, மேலே நட்ஸ் கொண்டு அலங்கரித்து சர்வ் செய்யவும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT