Types of chapathi
Types of chapathi 
உணவு / சமையல்

வித்தியாசமான 7 வகை சப்பாத்திகள்!

கல்கி டெஸ்க்

உடல் உரமேற கோதுமைப் பண்டங்கள் சாப்பிடுவது நல்லது. சப்பாத்தியில் பல வகைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். வித்தியாசமான 7 வகைகள் சப்பாத்தி பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாமே

சப்பாத்தியின் வகைகள்:

இனி சப்பாத்தியின் வகைகளைப் பார்ப்போம். ஃபுல்கா, பாக்ரி, காக்ரா, டபுள் ரோட்டி, த்ரிகோண் சப்பாத்தி, சதுர சப்பாத்தி, சுருள் சப்பாத்தி.

ஃபுல்கா

Phulka

இதை சுக்கா சப்பாத்தி என்றும் சொல்வர். கோதுமை மாவில் உப்பு, எண்ணெய், நீர் (அ) பால் மீந்துவிட்டால் வெறும் பால் விட்டும், அல்லது நீருடன் பால் கலந்தும் இளஞ்சூடாக்கி கலந்து பிசைத்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

சப்பாத்தி இட்டு சுடும் முறையில் சொன்னது போல் செய்து எண்ணெய் விடாமல் 1ம் பக்கத்தை (கேஸ் அடுப்பிலும் செய்யலாம்) தணலைப் பெரிதாக்கி தவாவிலிருந்து எடுத்து தணலின் மேல் நேரடியாக இடுக்கியால் போட நன்கு உப்பலாக வரும்.

கருக விடாமல் எடுத்து 1ம் பக்கத்தில் நெய் தடவி வைக்க மிருதுவாக இருக்கும். 2-ம் பக்கத்தைத் தணலில் போட வேண்டாம். சரியான முறையில் உப்பலாக வரவில்லை என்றால் மட்டுமே 2ம் பக்கத்தைத் தணலில் போடவும்.

பாக்ரி

Bhakri

ஃபுலகாவையே தவாளிலேயே, தணவின் மேல் போடாமல், 1ம் பக்கத்தை தவாவைத் தொட்டிருக்குமாறு திருப்பிப் போட்டு, 2ம் பக்கத்தில் நல்ல சுத்தமான கைத்துணியைக் கொண்டு லேசாக அழுத்தம் கொடுக்க தானாகவே உப்பலாக வரும். (இதுவும் டயட்டில் இருப்பவர்களுக்கு நல்ல உணவாகும்) உடனே தணலை 'சிம்'மில் வைத்து 2ம் பக்கத்தையும் ஒருமுறை ரோஸ்ட் செய்து எடுக்கவும்.

காக்ரா

Khakra Recipe

பாக்ரியையே இன்னமும் மெலிதாக இட்டு இரு பக்கமும் பிஸ்கெட் போல் ரோஸ்ட் செய்ய வேண்டும். இதில் தெய் தடவி தோசை மிளகாய்ப் பொடி தூவி சாப்பிட வித்தியாசமான சுவை கொடுக்கும்

டபுள் ரொட்டி

Double Roti

பிசைந்த சப்பாத்தி மாவிலிருந்து பூரிக்கு எடுப்பதுபோல் சிறு உருண்டைகளாக இரண்டினை எடுத்துப் பூரி சைஸில் இடவும் இரண்டு பூரிகளின் மேலும் லேசாக எண்ணெய் தடவி ஒரு பூரியின் மேல் கோதுமை மாவை பரப்பி மற்றொன்றின் மேல் படுமாறு வைத்து இட வேண்டும்.

அதாவது எண்ணெய் தடவிய பாகமும், எண்ணெய் தடவி மாவில் தோய்த்த பாகமும் ஒன்றன் மீது ஒன்று படும்படி வைத்து இட வேண்டும். லேசாக இட இட சப்பாத்தி பெரியதாக வரும்.

இனி தவாவில் போட்டு எண்ணெய் விடாமல் இரண்டு பக்கமும் ஒரே மாதிரி முழுவதுமாக கருக விடாமல் சுட்டெடுக்க வேண்டும். தவாவிலிருந்து எடுத்து சப்பாத்தி தேய்க்க பலகையிலோ (அ) சமையல் மேடையின் சுத்தமான பகுதியிலோ இந்த சப்பாத்தியை வேகமாக மேலிருந்து கீழாக வீசி அடிக்க அது தானாகவே இரண்டாகப் பிரியும்.

அப்படி ஒட்டாமல் பிரிந்தால் சப்பாத்தி உள்ளேயும்  நன்றாக வெந்திருப்பதாக அர்த்தம். இதன்மீது தேவையுள்ளவாகள் நெய் தடவி, கர்சீப் மடிப்பது போல் முக்கோணமாக மடித்து வைத்துவிடலாம். இந்த மிருதுவான சப்பாத்திகளை தாலுடன் தொட்டுச் சாப்பிடலாம்.

திரிகோண் சப்பாத்தி

Triangle Shape chapathi

சப்பாத்தியை வட்டமாக இட்டு அதன் மீது முழுவதும் லேசாக எண்ணெய் தடவி அதை அரையாக மடிக்கவும். மீண்டும் மடித்த பக்கத்தில் எண்ணெய் தடவி அதையும் வாக அதாவது முக்கோணமாக மடிக்கவும்.

இதனை கோதுமை மாலில் தோய்த்து எல்லா பக்கமும் ஒரே மாதிரியான 'திக்’னெஸ்  இருக்கும்படி இட்டு எண்ணெய் விட்டு சப்பாத்தி சுடும் முறையில் சொல்லியபடி சுடவும் பரோட்டா போல் மடிப்பு, மடிப்பாக அதாவது 3 மடிப்பாக எடுக்க வரும். எண்ணெய் தடவுவதால் கூடுதல் சுவை கிடைக்கும் இந்த வகை சப்பாத்தியில்

சதுர சப்பாத்தி

Square Chapathi

தரிகோண் சப்பாத்தியைப் போல், முதலில் வட்டமாக இட்ட மாவை எண்ணெய் தடவி மேலும் கீழும், பக்கவாட்டுகளிலும் மடித்துச் சதுர வடிவமாக மடித்துப் பெரிதாக இட்டு எண்ணெய் விட்டு சப்பாத்தி செய்யலாம்.

சுருள் சப்பாத்தி

spiral Chapathi

வட்டமாக இட்டு எண்ணெய் தடவி அதன் மீது கோதுமை மாவை தூவி நடுப்புள்ளியிலிருந்து ஆரமாக கத்தியால் கீறவும். அந்த இடத்திலிருந்து சுருட்டினால் கூம்பு வடிவ சுருளாக வரும். அந்த கூம்பினை மேலிருந்து கீழாக ஒரு அழுத்தம் கொத்து அதனை வட்ட வடிவமான சாப்பாத்தியாக இட்டு எண்ணெய் விட்டுச் சுட வித்தியாசமான சப்பாத்தி கிடைக்கும்.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT