healthy foods... 
உணவு / சமையல்

அற்புத மூலிகை கற்றாழை தொக்கு மற்றும் சத்தான சுரைக்காய் பச்சடி!

கலைமதி சிவகுரு

கற்றாழை தொக்கு

தேவையான பொருட்கள்:

கற்றாழை _1 கீற்று

கடலைப்பருப்பு_ 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் _2 ஸ்பூன்

கடுகு _ 1/4 ஸ்பூன்

வெந்தயம்_ 1/4 ஸ்பூன்

கருவேப்பிலை_1கைப்பிடி

சின்ன வெங்காயம்_10

பூண்டு _10 பல்

புளி _ சிறிய நெல்லிக்காய் அளவு

மிளகாய் தூள் _1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் _1/4 ஸ்பூன்

உப்பு _ தேவைக்கு

தாளிக்க

நல்லெண்ணெய் _2 ஸ்பூன்

கடுகு _1 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு _1ஸ்பூன்

கருவேப்பிலை _சிறிது

செய்முறை:

முதலில் கற்றாழையை கீறி ஜெல்லை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதில் ஜெல்லை போட்டு நன்கு வதக்கி உப்பி வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

பின்பு அதே பாத்திரத்தில் கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் ஒரு கைப்பிடி  கருவேப்பிலை போட்டு நன்கு வதங்கியதும் சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து நன்றாக வதக்கி அத்துடன் மிளகாய் தூள், உப்பு, 1சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கி தனியாக தட்டி ஆற விடவும்.

ஆறியதும் வதக்கி வைத்த கற்றாழை ஜெல்லோடு சேர்த்து மிக்ஸியில் போட்டு பெருங்காயத்தூள், ஊற வைத்த புளியையும் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு பொரிந்ததும் அரைத்த கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். மிகவும் சத்தான சுவையான கற்றாழை தொக்கு ரெடி.

சுரைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

சிறியதாய் நறுக்கிய சுரைக்காய் துண்டுகள் _3 கப் (750கிராம்)

நல்லெண்ணெய் _4 ஸ்பூன்

வறுத்து தோல் நீக்கிய நிலக் கடலை _6 ஸ்பூன்

பச்சை மிளகாய் _8

சீரகம்  _1 ஸ்பூன்

புளி _சிறிது

பெருங்காயத்தூள்_1/4 ஸ்பூன்

தக்காளி _1

பூண்டு _6 பல்

மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்

மல்லி தழை _சிறிது

கருவேப்பிலை _சிறிது

உப்பு   _ சிறிது

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை போட்டு சிறிது வறுத்து கொண்டு அத்துடன் பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி சேர்த்து வதக்கி சீரகம், புளி சேர்த்து நன்கு வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சுரைக்காய் துண்டுகளை போட்டு கல் உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும். பின் தக்காளியை வெட்டி சேர்த்து சிறிது கருவேப்பிலை, பூண்டு, மஞ்சள் தூள், மல்லி கீரை சேர்த்து நன்கு வதக்கி மூடி வைக்கவும். தக்காளி வதங்கி வெந்ததும் திறந்து பெருங்காயத்தூள் சேர்த்து கிண்டி இறக்கி ஆற விடவும்

பின்னர் முதலில் வறுத்து வைத்த வேர்க்கடலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து விட்டு அத்துடன் வதக்கிய சுரைக்காய் தக்காளியை சேர்த்து கரகரப்பாக அரைத்து உப்பு தேவை யானால் சிறிது சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வற்றல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்துவிடவும்.

சூப்பர் சுவையுடன் சுரைக்காய் பச்சடி தயார். இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

SIP திட்டத்தின் மாதத்தவனையை தவறவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT