Andhra Special Recipes! Image Credits: YouTube
உணவு / சமையல்

ஆந்திரா ஸ்பெஷல் நல்ல காரம் பொடி சாதம் வித் மசாலா மொச்சை ரெசிபிஸ்!

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான ஆந்திரா ஸ்பெஷல் நல்ல காரம் பொடி சாதம் வித் திருநெல்வேலி ஸ்பெஷல் மசாலா மொச்சை ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

நல்ல காரம் பொடி சாதம் செய்ய தேவையான பொருட்கள்.

பொடி செய்ய,

தனியா-2 தேக்கரண்டி.

உளுந்து- 2 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-5

கருவேப்பிலை-சிறிதளவு.

பூண்டு-5

புளி-சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

நல்ல காரம் பொடி சாதம் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் தனியா 2 தேக்கரண்டி,  உளுந்து 2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 5 சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 5, புளி சிறிதளவு சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள்  சேர்த்து இப்போது அனைத்தையும் ஆறவைத்த பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய்விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் பொடியை 2 தேக்கரண்டி சேர்த்து கருவேப்பிலை சிறிது சேர்த்து அத்துடன் 1 கப் சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் நல்ல காரம் பொடி சாதம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

மசாலா மொச்சை செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-3 தேக்கரண்டி.

கடுகு-1/4 தேக்கரண்டி.

சீரகம்-1/4 தேக்கரண்டி.

சோம்பு-1/4 தேக்கரண்டி.

வெங்காயம்-2

பச்சை மளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

மல்லித்தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய்தூள்-1/4 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

இஞ்சி-1 துண்டு.

உப்பு- தேவையான அளவு.

மொச்சைக்கொட்டை-2 கப்.

கடலை மாவு-2 தேக்கரண்டி.

மசாலா மொச்சை செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் எண்ணெய் 3 தேக்கரண்டி ஊற்றி கடுகு ¼ தேக்கரண்டி, சீரகம் ¼ தேக்கரண்டி, சோம்பு ¼ தேக்கரண்டி சேர்த்து பொரித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். இதில் இப்போது மல்லித்தூள்  ¼ மல்லித்தூள், மிளகாய்தூள் ¼ தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு இதில் ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்த மொச்சைக் கொட்டையை 2 கப் சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் 2 தேக்கரண்டி கடலைமாவை தண்ணீரில் நன்றாக கரைத்து வைத்து அதில் ஊற்றவும். சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு இறக்கவும். சுவையான மசாலா மொச்சை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

உலகில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் நாடுகள்!

குழந்தைகளுக்கு OCD இருப்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்! 

எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைகள்!

குறைந்த அளவிலான போதைப்பொருள் பயன்பாடு உள்ள நாடுகள்!

உச்சக்கட்டத்தில் போர்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்!

SCROLL FOR NEXT