இன்றைக்கு டேஸ்டான ராகி சப்பாத்தி மற்றும் பிரட் தோசை ரெசிபிஸை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ராகி சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்.
தண்ணீர்-1 கப்.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
ராகி மாவு-1 கப்.
நெய்-தேவையான அளவு.
ராகி சப்பாத்தி செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கப் தண்ணீர், சிறிது உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தண்ணீர் கொதித்து வந்ததும் 1 கப் ராகி மாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும் போது 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து வைத்துக்கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
இப்போது ராகிமாவு சிறிது தூவி சப்பாத்தியை திரட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது தோசைக் கல்லில் நெய் விட்டு சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்தால் ராகி சப்பாத்தி தயார். நீங்களும் வீட்டில் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பிரட் தோசை செய்ய தேவையான பொருட்கள்.
பிரட்-4
பச்சை மிளகாய்-2
பூண்டு-4
ரவை-2 தேக்கரண்டி.
அரிசி மாவு-3 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
சில்லி பிளேக்ஸ்-சிறிதளவு.
தண்ணீர்-2கப்.
எண்ணெய்-தேவையான அளவு.
பிரட் தோசை செய்முறை விளக்கம்.
முதலில் 4 பிரட் எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக பவுடராக அரைத்து பவுலில் மாற்றிக் கொள்ளவும். இப்போது அத்துடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய பூண்டு 4, ரவை 2 தேக்கரண்டி, அரிசி மாவு 3 தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு ½ தேக்கரண்டி, சில்லி பிளேக்ஸ் சிறிது சேர்த்துக் கொண்டு 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு கொள்ளவும்.
இப்போது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு தோசை மாவை ஊற்றி முறுகலாக இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பிரட் தோசை தயார். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப் பாருங்கள்.