Beetroot Rasam Recipe 
உணவு / சமையல்

பீட்ரூட் வச்சு ரசம் செய்யலாமா? எப்படி? 

கிரி கணபதி

ரசம் என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய சூப் வகை உணவாகும். இதை அப்படியேவும் குடிக்கலாம் அல்லது சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். இதன் லேசான கசப்பு மற்றும் காரமான சுவை, சாப்பிடவே அவ்வளவு ருசியாக இருக்கும். சாதாரணமாக ரசம் என்பது புளி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களை சேர்த்து செய்யப்படும். ஆனால் அதே ரசத்தில் பீட்ரூட்டை சேர்த்து, பீட்ரூட் ரசம் செய்யலாம் என்றால் நம்புவீர்களா? இப்படி செய்வதால் ரசத்தின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் எளிதாக வீட்டிலேயே எப்படி பீட்ரூட் ரசம் செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • 1 பீட்ரூட் 

  • 1 தக்காளி 

  • 1 வெங்காயம் 

  • 3 பல் பூண்டு 

  • சிறு துண்டு இஞ்சி 

  • 1 ஸ்பூன் கடுகு 

  • 1 ஸ்பூன் சீரகம் 

  • 1 ஸ்பூன் மிளகு 

  • 1 ஸ்பூன் எண்ணெய் 

  • கருவேப்பிலை சிறிதளவு 

  • தண்ணீர் தேவையான அளவு 

  • ருசிக்கு ஏற்ப உப்பு 

  • சிறிதளவு கொத்தமல்லி தழைகள்

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், மிளகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, அனைத்தையும் நன்கு வேக விடவும். 

பச்சை வாசனை போனதும், துருவிய பீட்ரூட் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அவை வேகும் வரை நன்கு சமைக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து, ரசத்தை லேசாக கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். பின்னர் வெப்பத்தைக் குறைத்து சுமார் 10 முதல் 15 நிமிடங்கள், மிதமான சூட்டில் கொதிக்க விடவும். 

பொதுவாக ரசத்தை கொதிக்க விடமாட்டார்கள், ஆனால் இதில் பீட்ரூட் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை நன்றாக வேக லேசாக கொதிக்க விடுவது நல்லது. இறுதியில் ரசம் சரியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லித் தழைகளைத் தூவி ஒரு கலக்கு கலக்கினால், அட்டகாசமான சுவையில் பீட்ரூட் ரசம் தயார். 

இதை சூப் போல அப்படியே எடுத்துக் குடிக்க வேற லெவல் டேஸ்டாக இருக்கும். அல்லது சாதத்தில் கலந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த பீட்ரூட் ரசித்தை ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT