Snacks.... Image credit - youtube.com
உணவு / சமையல்

முட்டைகோஸ் மஞ்சூரியனும், சிம்பிள் & டேஸ்டி சமோசாவும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுபவர்களா நீங்கள். உடல் சோர்வு ஏற்படும் சமயங்களில் சட்டென நினைவுக்கு வருவது டீ தான். அதுவும் மாலை நேரங்களில் டீயுடன் ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிடுவது நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. எளிதில் செய்யக்கூடிய அதே சமயம் ருசியான இரண்டு ஸ்னாக்ஸ் வகைகளை இங்கு பார்க்கலாம்.

முட்டைகோஸ் மஞ்சூரியன்:

முட்டைகோஸ் 1/4 கிலோ 

இஞ்சி நறுக்கியது 2 ஸ்பூன் 

பூண்டு நறுக்கியது 2 ஸ்பூன் 

சோள மாவு 3 ஸ்பூன்

மிளகுத்தூள் 1 ஸ்பூன்

உப்பு தேவையானது

வெங்காயம் 1

குடைமிளகாய் பாதி

சோயா சாஸ் 1 ஸ்பூன்

சில்லி சாஸ் 1 ஸ்பூன்

தக்காளி சாஸ் 1 ஸ்பூன்

மைதா 2 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

முட்டைகோசை நறுக்கி அத்துடன் உப்பு, இஞ்சி, பூண்டு நறுக்கியது, மைதா மாவு, சோள மாவு, மிளகு தூள் அனைத்தையும் சேர்த்து கலந்து உருட்டி வைத்துக் கொள்ளவும். இதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க மஞ்சுரியன் பால்ஸ் தயார்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், குடைமிளகாய், துருவிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் சோயா, சில்லி மற்றும் தக்காளி சாஸ்களை விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் அதில் மஞ்சுரியன் பால்ஸ்களை சேர்த்து கலந்து பரிமாற மிகவும் ருசியான முட்டைகோஸ் மஞ்சூரியன் தயார்.

சிம்பிள் & டேஸ்டி சமோசா:

மைதா ஒரு கப் 

வெங்காயம் 2

உருளைக்கிழங்கு 1

இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்

காரப்பொடி 1/2 ஸ்பூன் 

கரம் மசாலா 1/2 ஸ்பூன் 

சாட் மசாலா 1/2 ஸ்பூன் 

கொத்தமல்லி சிறிது 

கார்ன் ஃப்ளவர் 2 ஸ்பூன்

உப்பு தேவையானது

எண்ணெய் பொரிக்க

மைதா மாவுடன் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்து தோல் உரித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சாட் மசாலா, கரம் மசாலா, காரப்பொடி, கார்ன்ஃபிளவர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.

மைதா மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி சமோசா கோன் செய்து அதில் சிறிதளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடி எண்ணெயில் பொரித்தெடுக்க மிகவும் ருசியான சமோசா தயார்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT