இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி மற்றும் சுருள் பூரி ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்.
தேங்காய்-1 ½ கப்.
நெய்-2 தேக்கரண்டி.
சர்க்கரை-1/2 கப்.
பால்- சிறிதளவு.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
தேங்காய் பர்பி செய்முறை விளக்கம்.
முதலில் 1 ½ தேக்காயை எடுத்து பொடியாக நறுக்கி அதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஃபேனில் 2 தேக்கரண்டி நெய் விட்டு தேங்காய் துருவலை அதில் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். இப்போது இத்துடன் ½ கப் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். இதில் சிறிது பால், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கிவிட்டுக்கொண்டே வந்தால் பிசுபிசுப்பாக வர தொடங்கும்.
அப்போது இதை ஒரு ட்ரேவில் நெய் தடவி விட்டு அதில் கொட்டி நன்றாக பரப்பி விட்டு 10 நிமிடம் ஆற விடவும். அதன் பிறகு வேண்டிய அளவில் துண்டு துண்டாக வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பர்பி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
சுருள் பூரி செய்ய தேவையாற பொருட்கள்.
கோதுமை மாவு-1 கப்.
சர்க்கரை-2 தேக்கரண்டி.
பேக்கிங் பவுடர்-1/2 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
நெய்-3 தேக்கரண்டி.
சர்க்கரை-1/2 கப்.
குங்குமப்பூ-2 சிட்டிகை.
ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி.
சுருள் பூரி செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் 1 கப் கோதுமை மாவு, 2 தேக்கரண்டி சர்க்கரை, ½ தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ½ தேக்கரண்டி உப்பு, 3 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். இதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 1 கப் சர்க்கரைக்கு, 1 கப் தண்ணீர் விட்டு நன்றாக பிசுபிசுப்பு வந்ததும் ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள், 2 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கலக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
இப்போது மாவை நாலு பங்காக பிரித்துக்கொள்ளவும். சப்பாத்தி செய்வது போலவே பரப்பிக் கொள்ளவும். இப்போது அதன் மீது நெய் 1 தேக்கரண்டியும், மாவு சிறிதும் தூவி இதன் மீது இன்னொரு சப்பாத்தி வைத்து நெய், மாவு சேர்த்து இப்படியே ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கவும்.
இப்போது நன்றாக மாவை பரப்பி விடவும். இப்போது மாவை நன்றாக சுருட்டி விட்டு துண்டுகளாக வெட்டவும். வெட்டி வைத்த துண்டுகளை சப்பாத்தி கட்டை வைத்து மேலே ஒருமுறை தேய்த்துக் கொள்ளவும். இப்போது நன்றாக மிதமான எண்ணெய்யில் மாவை போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து விடுங்கள்.
இதை செய்து வைத்திருக்கும் பாகில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து பரிமாறவும். அவ்வளவுதான் டேஸ்டியான சுருள் பூரி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.