கேரட் பன்னீர் சப்பாத்தி
கேரட் பன்னீர் சப்பாத்தி 
உணவு / சமையல்

கலர் ஃபுல் கேரட் பன்னீர் சப்பாத்தி!

கல்கி டெஸ்க்

-சௌமியா சுப்ரமணியன்.

தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

கேரட் - 1

பன்னீர் - 1/4 கப்

வெங்காயம் - 1

கொத்தமல்லி இலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

எள் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கேரட்

செய்முறை :

கேரட் மற்றும் பன்னீரை துருவிக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பவுலில் வெங்காயம், பச்சை மிளகாய் ,கொத்தமல்லி இலை, கேரட், பன்னீர் துருவல், அரிசி மாவு, எள், சீரகம், மிளகாய்த்தூள், நெய்  எல்லாவற்றையும் போட்டு , உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து  சிறிதளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்தில் பிசையவும்.

பன்னீர் துருவல்

ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து  ரொட்டிகளாக கைகளால் தட்டவும். அடுப்பில் தோசைக்கல் காய்ந்தவுடன், தட்டிய ரொட்டியை பதமாக போட்டு, இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.சுவையான, ஆரோக்கியமான ரொட்டி ரெடி.

இரவில் ஒளிரும் அதிசயத் தாவரங்கள்!

Brazilian Treehopper: மண்டை மேல கொண்டை வச்சிருக்கானே எவன்டா இவன்? 

ஏர்ல் கிரேய் டீயிலிருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

எமனை உயிர்ப்பிக்க பூமாதேவி வழிபட்ட தலம் எது தெரியுமா?

Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 

SCROLL FOR NEXT