நுங்கு இனிப்பு சாதம் ... 
உணவு / சமையல்

அடிக்குற வெயிலுக்கு கூலா நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல கடைய போட்டுட்டு உட்கார்ந்துடுவாங்க.

இதுவரை நுங்கை ஜூஸ், ஸ்மூத்தின்னு செஞ்சு சாப்பிட்டிருப்பீங்க. ஆனால் சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டிருக்கீங்களா? இப்படி ஒருமுறை நுங்கை வித்தியாசமாக செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. அப்பறம் விடவே மாட்டிங்க. சரி வாங்க, நுங்கு இனிப்பு சாதம் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

முந்திரி-10.

திராட்சை-10.

நெய்-தேவையான அளவு.

சாதம்-2கப்.

ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி.

நுங்கு-1 கப்.

சக்கரை-3 தேக்கரண்டி.

செய்முறை விளக்கம்:

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதிலேயே சின்னதாக வெட்டி வைத்திருக்கும் நுங்கு 1கப்பை சேர்த்து அத்துடன் ¼ தேக்கரண்டி ஏலக்காய், சக்கரை 3 தேக்கரண்டி சேர்த்து கிளறவும்.

இப்போது செய்து வைத்திருக்கும் சாதம் 2 கப் சேர்த்து கிளறி விட்டு முந்திரி, திராட்சையை அத்துடன் சேர்த்து பின்பு நெய் 1 தேக்கரண்டி சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவு தான் நுங்கு இனிப்பு சாதம் தயார். ரொம்ப சிம்பிளாக செய்து முடிச்சிடலாம். இந்த சாதம் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். இதை வீட்டிலே ஒருமுறை முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT