காய் மிக்சர் youtube.com
உணவு / சமையல்

நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

கல்கி டெஸ்க்

காய் மிக்சர்

தேவை: உருளைக்கிழங்கு - 2, மரவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு - தலா ¼ கிலோ, முந்திரிப் பருப்பு - 25 கிராம், உப்பு, காரம், எண்ணெய், கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை: தோல் நீக்கிய கிழங்குகளை மெலிதாகச் சீவவும். எண்ணெயில் மொரமொரப்பாகப் பொரித்து, உப்பு, காரம், பொரித்த கறிவேப்பிலை. முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.

- இந்திரா சந்திரன், திருச்சி

 

புஜியா

தேவை: பச்சரிசி மாவு - 2 கப், தயிர், பால் ஏடு, எலுமிச்சைச் சாறு - தலா 2 டீஸ்பூன், மிளகுப் பொடி - 1½ டீஸ்பூன், உப்பு – ¼ டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க.

செய்முறை: எல்லாப் பொருள்களையும் ஒன றாகக் கலந்து, நீர் சேர்த்துப் பிசையவும். பெரிய கண் ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

- அனுஷ்யா மம்தோரா, சென்னை

வாழைக்காய் ரிப்பன் பகோடா

ரிப்பன் பகோடா

தேவை: வாழைக்காய் - 1, கடலை மாவு, அரிசி மாவு - தலா ½ கப், வெண்ணெய்- 1 டீஸ்பூன், உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: தோல் சீவி வேகவைத்த வாழைக்காயை மிக்ஸியில் போட்டு மசிக்கவும். மாவுகள், இதரப் பொருள்களை விழுதுடன் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை நாடா அச்சில் போட்டுப் பிழியவும்.

- ஆர்.வேதவல்லி, சென்னை

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT