Maravalli Kizhangu adai and Tofu Bhurji Recipes Image Credits: YouTube
உணவு / சமையல்

சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை மற்றும் டோஃபு புர்ஜி ரெசிபிஸ்!

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான மற்றும் ஆரோக்கியம் மிகுந்த மரவள்ளிக்கிழங்கு அடை மற்றும் டோஃபு புர்ஜியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

மரவள்ளிக்கிழங்கு அடை செய்ய தேவையான பொருட்கள்;

பச்சரிசி-1 கப்.

கடலைப்பருப்பு-1/4 கப்.

வரமிளகாய்-4

மரவள்ளிக்கிழங்கு-1

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

மரவள்ளிக்கிழங்கு அடை செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் 1 கப் பச்சரிசி, ¼ கப் கடலைப்பருப்பு, 4 வரமிளகாய் சேர்த்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இப்போது ஒரு பெரிய  மரவள்ளிக் கிழங்கை தோலை நீக்கி விட்டு நன்றாக கழுவிய பின் சீவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். சீவி வைத்திருக்கும் மரவள்ளிக்கிழக்கையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 2 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிது சேர்த்து தாளித்து இத்துடன் சிறிது உப்பு சேர்த்து மாவுடன் சேர்த்து கலந்துவிடவும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை கொஞ்சம் தடிமனாக ஊற்றி எண்ணெய் விட்டு பொன்னிறமாக இருபக்கமும் முறுகவிட்டு பிறகு எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு அடை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

டோஃபு புர்ஜி செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-தேவையான அளவு.

சீரகம்-1 தேக்கரண்டி.

கடலை மாவு-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1

தக்காளி-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1 தேக்கரண்டி.

துருவிய டோஃபு-1கப்.

கொத்தமல்லி-சிறிதளவு.

டோஃபு புர்ஜி செய்முறை விளக்கம்;

முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்துவிட்டு அத்துடன் 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கி விட்டுக் கொள்ளவும். இப்போது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய தத்காளி 1, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

இப்போது இதில் ¼ தேக்கண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி மிளகாய் பொடி, 1 தேக்கரண்டி தனியா பொடி, 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் மூடிவைத்து விடவும். இப்போது டோஃபுவை நன்றாக துருவி 1கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். இப்போது இதையும் சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு கொத்தமல்லி சிறிது சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான டோஃபு புர்ஜி தயார். இதை சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT