Sweet Karam Batchanam Recipes 12
Sweet Karam Batchanam Recipes 12 
உணவு / சமையல்

தினை மால்புவா & கம்பு காராசேவ்!

கல்கி டெஸ்க்

தினை மால்புவா!

தேவையானவை:

தினை - ½ கப், மைதா - 1 கப், தயிர் - 2 டீஸ்பூன், சீனி - 2 கப், உப்பு - தேவையான அளவு, ரவை - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - ¼ கப், எண்ணெய் - 400 மி.லி., ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

நெய், சீனி, சர்க்கரை, தயிர், உப்பு சேர்த்து நன்றாக கரண்டியால் அடிக்கவும். பிறகு, தினை, மைதா, பால், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். மிதமான சூட்டில் எண்ணெய்யில் கரண்டியால் எடுத்து ஊற்றவும். பொன் நிறமாக எடுக்கவும். சீனியை பாகு காய்ச்சி (கம்பி பதம் வேண்டாம்) ஏலப்பொடி சேர்க்கவும். எண்ணெய்யிலிருந்து மால்புவாவை சீனி பாகில் போட்டு எடுக்கவும். சுவையான சுலபமான தினை மால்புவா தயார்.

கம்பு காராசேவ்!

கம்பு மாவு - ½ கப், புழுங்கல் அரிசி - 1½  கப், கடலை மாவு - 1 கப், காய்ந்த மிளகாய் - 10, எண்ணெய்- 400 மி.லி., உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, மிளகாய் சேர்த்து ஆட்டி மாவுகள் சேர்க்கவும். எண்ணெய் சூடானவுடன் காராசேவ் கரண்டியில் தேய்த்து எடுக்கவும்.

- வனிதா ஜெயசீலன்

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT