முட்டை உருளைகிழங்கு கட்லெட்
முட்டை உருளைகிழங்கு கட்லெட் 
உணவு / சமையல்

சட்டுன்னு செய்ய ஒரு ரெசிபி!

நான்சி மலர்

முட்டை உருளைகிழங்கு கட்லெட்!     

தேவையானவை:

முட்டை – 2, உருளைகிழங்கு – 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, மிளகாய்த் தூள் -  ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் -  ஒரு தேக்கரண்டி,  
கரம் மசாலா -  சிறிதளவு, சின்ன சீரகம் -  சிறிதளவு, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கேற்ப,
பிரெட் கிராம்ஸ் - சிறிதளவு.

செய்முறை:

ரு பெரிய பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீரை எடுத்து, அதில் 2 உருளையையும், 2 முட்டையையும் போட்டு, அரை மணி நேரம் நன்றாக வேகவைக்கவும்.  

முட்டையும் உருளையும் ஆறிய பிறகு, அதை தோலூரித்து துருவி வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கிப்போடவும். சிறிது அளவு தண்ணீர்விட்டு அந்தக் கலவையை நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.  பிசைந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பவுலில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி, சிறிய உருண்டைகளை அதில் டிப் செய்து பிரண்ட் கிராம்ஸில் உருட்டி, கடாயில் காய வைத்திருக்கும் எண்ணெயில் போட்டு நன்றாக பொன்னிறமாக வரும்வரை பொறித்து எடுக்கவும்.

இதை டொமேட்டோ சாஸ் அல்லது கெச்சப் உடன் சாப்பிட்டால் இன்னும் சுவையாகயிருக்கும்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT