'இனிப்புகளின் ராணி' என்றழைக்கப்படும் பாயாசம் உருவான கதை தெரியுமா?
இதை தென்இந்தியாவில் பாயாசம் என்றும் வடஇந்தியாவில் கீர் என்றும் அழைப்பார்கள். இது 2000 வருடங்களுக்கு முன்பு ஒடிஸா மாநிலத்தில் உருவானதாக கூறப்படுகிறது. கோனார்க் சூரிய கோவில் உருவானதற்கும் பாயாசத்திற்கும் சம்மந்தம் உண்டு என்று சொல்லப்படுகிறது. கடவுள்களுக்காக கோவிலில் செய்யப்பட்ட உணவுகளில் பால் பாயாசமே முதன்மையாக இருந்தது. கேரளா, தமிழ்நாடு பாயாசம் செய்வதற்கு பிரபலமாகும்.
நன்மைகள்:
ஜவ்வரிசி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும், செரிமானத்திற்கு உதவும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும், இரும்பு குறைப்பாட்டை போக்கும்.
கேரட் சப்பிடுவதால் பார்வை நன்றாக தெரியும். ரத்தத்திலிருக்கும் சக்கரை அளவை கட்டுப்படுத்தும், இதயத்தை பாதுகாக்கும்.
ரெசிபி:
தேவையான பொருட்கள்:
ஐவ்வரிசி - 1 கப்
துருவிய கேரட்- 1 கப்
வெல்லம் - 1கப்
முந்திரி - 2 தேக்கரண்டி
பிஸ்தா - 2 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 2 தேக்கரண்டி
பாதாம் - 2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
பால் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு கப் ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி ½ மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசி ஊறிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஃபேனில் கொஞ்சமாக நெய் சேர்த்து முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதே ஃபேனில் மீதம் இருக்கும் நெய்யில் நன்றாக துருவிய கேரட்டை 1 கப்பை சேர்த்து வதக்கவும். கேரட் வெந்து கொண்டிருக்கும் போதே 1 கப் பாலை அதனுடன் சேர்க்கவும். அதனுடனேயே ஊற வைத்திருந்த ஜவ்வரிசியையும் சேர்த்துவிட்டு ஜவ்வரிசியும், கேரட்டும் வேந்ததும் இதனுடன் 1 கப் வெல்லம் சேர்க்கலாம். வெல்லம் நன்றாக கரைந்து வந்ததும் அத்துடன் 1 கப் பால் சேர்க்கவும்.
இத்துடன் நாம் வறுத்து வைத்திருந்த முந்திரி, உலர்ந்த திராட்சை, பாதாம்மையும், ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டியையும் சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு இறக்கவும். கேரட் ஜவ்வரிசி பாயாசத்தை சுட சுட பரிமாறுங்க செம டேஸ்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்துச்சுன்னு சொல்லுங்க.