Pongal recipes Image credit - youtube.com
உணவு / சமையல்

ஐந்தரிசி பொங்கல் - கமகமக்கும் உளுந்து தக்காளி சட்னி செய்வது எப்படி?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ஐந்தரிசி பொங்கல்:

பச்சரிசி. 1/2 கப்

பாசிப்பருப்பு1/4 கப் 

சேமியா.  1 கைப்பிடி

ரவை.    1/4 கப்

ஜவ்வரிசி.  1 கைப்பிடி

இஞ்சி ஒரு துண்டு 

பச்சை மிளகாய் 3 

மிளகு 1 ஸ்பூன் 

சீரகம் 1 ஸ்பூன் 

தேங்காய் பால் 1/2 கப் 

நெய் 4 ஸ்பூன்

உப்பு தேவையானது

முந்திரி பருப்பு 10

பெருங்காயம் சிறிது

ஜவ்வரிசியை 20 நிமிடங்கள் ஊற விடவும். 5 கப் தண்ணீர் விட்டு அதில் களைந்த அரிசி, பாசிப் பருப்பு, ஊற வைத்த ஜவ்வரிசி சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக விடவும். சேமியா, ரவை இரண்டையும் சூடு வர வறுத்து அதனையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை வெதுவெதுப்பான நீர் கலந்து அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது வாணலியில் நெய்விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உடைத்த முந்திரி பருப்பு, கருவேப்பிலை சேர்த்து கிளறவும். அத்துடன் பொடித்த மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து வறுத்து வெந்த அரிசி பருப்பு கலவையில் கொட்டவும். அத்துடன் வேகவைத்த சேமியா, ரவையையும் கலந்து தேவையான உப்பு சேர்த்து கடைசியாக திக்கான தேங்காய்ப்பால் கலந்து பரிமாற மிகவும் ருசியான ஐந்தரிசி பொங்கல் தயார்.

கமகமக்கும் உளுந்து தக்காளி சட்னி:

உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன் 

தக்காளி 3

மிளகாய் 4

வெந்தயம் 1/4 ஸ்பூன்

இஞ்சி சிறு துண்டு

சோம்பு 1/2 ஸ்பூன்

உப்பு சிறிது

புளி கொட்டை பாக்களவு

தாளிக்க: 

கடுகு, நல்லெண்ணெய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள்

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும். கலர் மாறும் சமயம் மிளகாய், வெந்தயம், சோம்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சித் துண்டு, புளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்ட மிகவும் ருசியான மணமான சட்னி தயார். இதனை பொங்கல், இட்லி, தோசை, பூரி மட்டுமில்லாமல் சூடான சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT