தேவை:
பச்சை மிளகாய் ½ கிலோ
சுத்தம் செய்த கெட்டிப் புளிக் கரைசல் ½ கப்,
கடுகு 25 கிராம்,
வெந்தயம் 25 கிராம்,
கருப்பு எள் 50 கிராம்,
மஞ்சள் தூள் 1டீஸ்பூன்,
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
கல் உப்பு தேவையான அளவு.
செய்முறை:
வாணலியை சூடாக்கி, எள், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்(dry roast). ஆறியதும், மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும்.
பின் மிளகாயை காம்பை கிள்ளிவிட்டு ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாயைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி உப்புப் போடவும். கொதி வந்ததும் மசாலா பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து ஒன்று சேர கலந்து விடவும். இரண்டு நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.
ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு மூடவும். தயிர் சாதத்துக்கு அருமையான காம்பினேஷன்
இப்போது பச்சை மிளகாய் ஊறுகாய் ரெடி இது மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் இதை ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடலாம்.