தேவையானவை :
வேர்க்கடலை - 200 கிராம்
பச்சை பயிறு - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 6
கேழ்வரகு மாவு - 250 கிராம்
வாழை இலை - 1
செய்முறை:
வேர்க்கடலை, பச்சை பயிறு இரண்டையும் தனி தனியே வறுத்து எடுக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி மிக்ஸியில் திரித்து கொள்ளவும். பயிறையும் திரிக்கவும் மாவும், ரவை போன்ற நொய்யுமாக இருக்கும் போது எடுத்து நன்றாக கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து கலந்து வைத்த மாவை போட்டு வெல்லத்தை தூளாக்கி போடவும். சிட்டிகை உப்பும், ஏலக்காய் பொடியும் சேர்த்து 1கப் தண்ணீர் விட்டு கட்டியாக கிளறவும். சிறு தீயில் கலவை நன்கு கலந்ததும் இறக்கி விடவும். கேழ்வரகு மாவை சிறிது உப்பு நீர் விட்டு கட்டியாக பிசைந்து கொள்ளவும். வாழை இலையை கையகல அளவிற்கு சிறு துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு இலையிலும் சப்பாத்தி அளவிற்கு பிசைந்த மாவை எடுத்து தட்டவும். பின் வேர்க்கடலை கலவையை தேவையான அளவு எடுத்து தட்டிய மாவின் மீது வைத்து பரப்பி இலை யோடு சேர்த்து இரண்டாக மடிக்கவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து கொண்டு இலையோடு ஆவியில் வைத்து வேக விடவும். சுவையான, சத்தான வேர்க்கடலை போளி ரெடி