Sweet recipes 
உணவு / சமையல்

புதுமையான மற்றும் சுவையான ஸ்வீட் வகைகள்!

கலைமதி சிவகுரு

பிஸ்கட் பாள், பன்னீர் கோவா, மில்க்பவுடர் லட்டு, பாதாம் ரொட்டி, ரவா அல்வா!

பிஸ்கட் பாள்

தேவையான பொருட்கள்:

மேரி பிஸ்கட் – 10

டேரி மில்க் சாக்லேட் – 50 கிராம்

நெய் – 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு பொடி அல்லது துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்

செய்முறை: முதலில் மேரி பிஸ்கட்டை மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சாக்லேட்டை உருக்கவும். உருகிய சாக்லேட்டை பிஸ்கட் பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து சிறிய பந்தாக உருட்டவும். பந்துகளை கடலைப் பருப்பு பொடியில் அல்லது தேங்காயில் சுற்றி அலங்கரிக்கவும். இதனை குளிரவைத்து பரிமாறலாம்.

பன்னீர் கோவா

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 1 கப் (துருவியது)

பால் – ½ கப்

சர்க்கரை – ½ கப்

நெய் – 2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை: கடாயில் நெய் சேர்த்து பன்னீர் மற்றும் பாலை சேர்த்து கொதிக்க விடவும். பின் சர்க்கரையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். கலவை கெட்டியானதும் ஏலக்காய் பொடியை சேர்த்து இறக்கவும். இதை குளிரவைத்து, உங்கள் விருப்பமான வடிவில் உருட்டி அலங்கரிக்கவும்.

மில்க்பவுடர் லட்டு

தேவையான பொருட்கள்:

மில்க் பவுடர் – 1 கப்

சர்க்கரை – ½ கப்

நெய் – ¼ கப்

ஏலக்காய் பொடி – சிறிதளவு

துருவிய பாதாம் மற்றும் பிஸ்தா – அலங்கரிக்க

செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, மில்க் பவுடரை சேர்த்து மெதுவாக கிளறவும். பின் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து, மிதமான தீயில் சற்று பொரிய விடவும். கலவை லட்டு பதம் வரும்போது ஏலக்காய் பொடியை சேர்க்கவும். கையை நெய்யில் தடவி, லட்டுக்களாக உருட்டி, அதன் மேல் பாதாம், பிஸ்தா துருவல் சேர்த்து அலங்கரிக்கவும்.

பாதாம் ரொட்டி

தேவையான பொருட்கள்:

பாதாம் – 1 கப் (நன்றாக அரைத்தது)

சர்க்கரை – 1 கப்

பால் – ½ கப்

நெய் – ¼ கப்

ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை: பாதாம் பொடியை, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும். கலவை கெட்டியாக வரும் வரை அடுப்பில் வைத்து கிளறவும். நெய் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கிளறி ஏலக்காய் பொடியை சேர்க்கவும். குளிர வைத்த பின் சிறிய உருண்டைகள் அல்லது ரொட்டிகளாக வெட்டி பரிமாறலாம்.

ரவா அல்வா

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்

சர்க்கரை – 1 கப்

நெய் – ½ கப்

பால் – 2 கப்

கசகசா மற்றும் ஏலக்காய் பொடி – சிறிதளவு துருவிய பாதாம், முந்திரி – அலங்கரிக்க

செய்முறை: கடாயில் நெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வேகவைக்கவும். பால் சேர்த்து கிளறி, நன்கு வேகவிடவும். பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் கசகசாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேல் பாதாம், முந்திரி தூவி அலங்கரிக்கவும்.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT