உணவு / சமையல்

இரும்பு சத்துமிக்க முருங்கை கீரை சூப்!

கல்கி டெஸ்க்

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

முருங்கை இலைகள் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த கீரை. இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு உதவும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் தூக்கமின்மைக்கு உதவுகிறது.

உடலின் கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த முருங்கை இலை சூப்பும் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்ல வைத்தியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

முருங்கை கீரை ஒரு கைப்பிடி அளவு

பத்து சின்ன வெங்காயம் உரித்தது

பூண்டு உரித்து சிறிய துண்டுகளாக்கியது 10 பல்

மிளகு 10

கான்ப்ளார் மாவு 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிதளவு

வெண்ணெய் சிறிதளவு

உப்பு தேவையான அளவு.

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். துளிஅளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அதில் முருங்கை கீரை, சின்ன வெங்காயம் ,பூண்டு , சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்

அதில் மிளகினை ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்க்கவும்.

பின்னர் கார்ன்ப்ளார் மாவினை கரைத்து ஊற்றவும்.

அதில் வெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

அதில் தேவையான அளவு உப்பு ,மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறலாம்.

இதில் சேர்த்து இருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, கீரை என அனைத்தும் உடலுக்கு நல்ல சக்தியை தரக் கூடியது தான். இந்த முருங்கை கீரை சூப் உடல் சோர்வு ,உடல் வலி உள்ளவர்களுக்கு, ஒரு நல்ல மருந்து. இவர்களுக்கு மட்டும் இல்லை குழந்தைகளுக்கும் இது மிகவும் நல்லது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT