உணவு / சமையல்

செய்வது ரொம்ப சுலபம். சுவையோ ஆஹா அருமை!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

Spicy துவையல்:

கோவக்காய் 100 கிராம் 

சின்ன வெங்காயம் 50 கிராம் 

பூண்டு 10 பற்கள் 

உப்பு 

புளி நெல்லிக்காய் அளவு 

மிளகாய் வற்றல் 6

உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நறுக்கவும். கோவைக்காயையும்  நறுக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகாய் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு வாணலியில் சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் நறுக்கி வைத்த கோவக்காய், வெங்காயம் இரண்டையும் சேர்த்து பூண்டையும் போட்டு வதக்கவும். கடைசியாக புளி, உப்பையும் சேர்த்து இரண்டு கிளறு கிளறி ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறி எடுக்க ருசியான கோவக்காய் துவையல் ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து டாங்கர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

டாங்கர் பச்சடி:

உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன் பெருங்காயம் அரை ஸ்பூன் 

உப்பு சிறிது 

சீரகம் கால் ஸ்பூன் 

தயிர் ரெண்டு கரண்டி 

தாளிக்க: கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிது வாணலியில் உளுத்தம் பருப்பு, பெருங்காயகட்டி ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து ஆறியதும் உப்பு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். சிறிது ஆறியதும் அதில்

அதிகம் புளிப்பில்லாத தயிர் சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கடுகு சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொட்ட ருசியான டாங்கர் பச்சடி தயார். இது துவையல் சாதம், சாம்பார் சாதத்திற்கு  தோதாக இருக்கும்.

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

SCROLL FOR NEXT