பணியாரம் வகைகள்... 
உணவு / சமையல்

டக்குனு செய்ய டக்கரான இனிப்பு பணியாரம் வகைகள்!

சேலம் சுபா

ணியாரம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகள் விரும்பும் வகையில் அதையே சுவையாக வும் சத்தாகவும் தந்தால் இன்னும் விரும்புவார்கள். இது போன்ற பணியார வகைகள் செய்வதற்கும் எளிது  சாப்பிடுவதற்கும் குஷிதான்.

மைதா பணியாரம்
தேவை:

மைதா மாவு - இரண்டு சிறிய கப் வாழைப்பழம் - ஒன்று
சர்க்கரை - ஒரு சிறிய கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
மைதாவை சலித்து நீர் சேர்த்து கட்டிகளின்றி கெட்டியாக கரைத்து அதில் சர்க்கரையையும் பிசைந்த வாழைப் பழத்தையும் போட்டு நன்றாக கலந்து ஒரு அரைமணி நேரம் ஊறவைக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணையை காய வைத்து ஒரு குழி கரண்டி மாவை ஊற்றவேண்டும். பணியாரம் அப்பம் போல் எழுந்தவுடன் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும். இதே போல் குழிப்பணியார சட்டியிலும் நெய்யில் அரை கரண்டி  மாவு ஊற்றி பணியாரம் போல் சுட்டு தரலாம். இதனுடன் விரும்பினால் ஒரு டேபிள் ஸ்பூன் ரவை சேர்க்கலாம். வாழைப்பழம் போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம் . வாழைப்பழம் சேர்த்தால் சத்துடன் ருசியும் கூடும்.

கோதுமை பணியாரம்
சம்பா கோதுமை மாவு - ஒரு கப்
பச்சரிசி மாவு - ஒரு கப்
-வெல்லம் ஒரு கப்
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
வெல்லத்தை நன்றாகப்பொடி செய்து சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும் . அதனுடன் கோதுமை மாவு, பச்சரிசி மாவு ஆகியவற்றைக் கலந்து துருவிய தேங்காய் துருவல் ,ஏலக்காய்த்தூள் அனைத்தையும் கலந்து பணியார சட்டியில் ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்கவும். உடனடியாக செய்வதற்கு ஏற்ற சத்துள்ள கோதுமை மாவு பணியாரம் ரெடி.

ரவை பணியாரம்
தேவை:

ரவை ஒரு கப்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - 8
முந்திரி பருப்பு -  10
செய்முறை:
தேங்காயில் பால் எடுத்து வைக்கவும். ரவை, மைதா இரண்டையும் எடுத்த தேங்காய் பால் விட்டு கெட்டியாக கரைத்து சிறிது நேரம் ஊறிய பின் சர்க்கரையை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். விரும்பினால் ஏலப்பொடி சிறிதாக வெட்டிய அல்லது துறுவிய முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும். சிறு தீயில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் கரண்டியால் அளவாக ஊற்றவும். மேலே எழும்பி வந்து வந்ததும் வெள்ளையாகவே எடுக்கவும். தேங்காய் பாலுக்கும் பதில் தேங்காய் துருவலும் போடலாம்.

அரிசி பணியாரம்
பச்சரிசி - 4 கப்
புழுங்கல் அரிசி -  2 கப்
உளுத்தம் பருப்பு - ரெண்டு ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:
பச்சரிசி புழுங்கரிசி உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து மைய அரைத்து வைத்துக்கொண்டு சர்க்கரையையும் அதனுடன் சேர்த்து கரைக்க வேண்டும். பின்பு வாணலியில் தேவையான எண்ணெயைக் காயவைத்து ஒரு குழி கரண்டி மாவை ஊற்றவேண்டும் பணியாரம் எழும்பியவுடன் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT