Summer special lassi recipie's Image Credits: Tripadvisor
உணவு / சமையல்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க லஸ்ஸி வகைகள் செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

'லஸ்ஸி' முதல் முதலில் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தான் உருவானது. இது வடஇந்தியாவிலே மிகவும் பிரபலமாகும். லஸ்ஸி என்பதற்கான அர்த்தம் பஞ்சாபியில், கட்டி தயிரில் தண்ணீரை கலப்பது என்று பொருள். பஞ்சாப்பில் பாரம்பரியமாக லஸ்ஸியை எருமை பாலில் இருந்தே செய்கிறார்கள். அத்தகைய லஸ்ஸியை இன்று நம் வீட்டிலேயே எப்படி  செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

கேசர் பிஸ்தா லஸ்ஸி

கேசர் பிஸ்தா லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்.

கட்டியான தயிர்-400ml.

கட்டியான பால்-125ml.

பொடியாக நறுக்கிய பாதாம்-1 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய பிஸ்தா- 1 தேக்கரண்டி.

ஏலக்காய் தூள்- ¼ தேக்கரண்டி.

குங்குமப்பூ- 2 தேக்கரண்டி.

பிரஸ் கிரீம்- 2 தேக்கரண்டி.

சக்கரை- 2 தேக்கரண்டி.

ஐஸ் கட்டிகள்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்;

முதலில் மிக்ஸியில் 400ml நல்ல கட்டியான தயிரை சேர்க்கவும். இப்போது அதனுடன் ப்ரீசரில் வைத்த நல்ல கட்டியான பால் 125 ml சேர்த்துக்கொள்ளவும். 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பாதாம், பொடியாக நறுக்கிய பிஸ்தா, 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள், 2 தேக்கரண்டி குங்குமப்பூ ஊற வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். இத்தோடு 2 தேக்கரண்டி பிரஸ் கிரீம், 2 தேக்கரண்டி சக்கரை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிளேஸ் டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் லஸ்ஸியை ஊற்றி மேலே பாதாம், பிஸ்தா பொடி செய்து வைத்திருப்பதை தூவி பரிமாறவும். அவ்வளவு தான். இந்த வெயிலுக்கு இதமா வீட்டிலேயே லஸ்ஸி செய்து குடிச்சி பாருங்க செமையாயிருக்கும்.

மாம்பழ லஸ்ஸி

மாம்பழ லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்.

மாம்பழம்-2

தயிர் – 1 கப்.

சக்கரை- 2 தேக்கரண்டி.

தேங்காய் பால்-1 கப்.

ரோஸ் வாட்டர்-1/2 தேக்கரண்டி.

ஏலக்காய்-1 சிட்டிகை.

ஐஸ் கட்டிகள்- தேவையான அளவு.

பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா- தேவையான அளவு

செய்முறை விளக்கம்;

முதலில் இரண்டு மாம்பழங்களை தோலுரித்து விட்டு சதையை மட்டும் சிறிதாக வெட்டி மிக்ஸியில் சேர்க்கவும். இத்தோடு பிரிட்ஜில் வைக்கப்பட்ட கட்டியான தயிரையும் 1 கப் இத்துடன் சேர்க்கவும். சக்கரை  2 தேக்கரண்டி, தேவையான அளவு ஐஸ், தேங்காய் பால் 1கப், ரோஸ் வாட்டர் ½ தேக்கரண்டி, ஏலக்காய் தூள் 1 சிட்டிகை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கண்ணாடி கிளேசில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தா பொடி செய்ததை தூவி பரிமாறவும். இந்த லெஸியை வீட்டிலேயே செஞ்சி பாருங்கசெம டேஸ்டாக இருக்கும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT