healthy foods Image credit -yourube.com
உணவு / சமையல்

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு மசாலா மற்றும் உருளைக்கிழங்கு முட்டை பொரியல் ரெசிபிஸை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

சேனைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்;

வேகவைக்க,

சேனைக்கிழங்கு-2 கப்.

மஞ்சள் தூள்-சிறிதளவு.

உப்பு- சிறிதளவு.

புளி-சிறிய துண்டு.

மசாலா செய்ய,

எண்ணெய்-தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்-1

தக்காளி-1

வரமிளகாய்-2

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

தேங்காய்-1 கைப்பிடி.

முந்திரி-10

கொத்தமல்லி-சிறிதளவு.

சேனைக்கிழங்கு மசாலா செய்முறை விளக்கம்;

முதலில் சேனைக்கிழங்கை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி 2 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். இப்போது இதை நன்றாக அலசி விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள்தூள், உப்பு சிறிதளவு, புளி சிறிய துண்டு சேர்த்து நன்றாக வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு1 தேக்கரண்டி, சோம்பு  1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, வரமிளகாய் 2, சிறிதாக நறுக்கிய தக்காளி 1, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி,மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது தேங்காய் 1 கைப்பிடி, முந்திரி 10 சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக வேக வைத்திருக்கும் சேனைக்கிழங்கை சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லி சிறிது தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சேனைக்கிழங்கு மசாலா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்க.

உருளைக்கிழங்கு முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்;

உருளைக்கிழங்கு-2

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்-1

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

பூண்டு-2.

உப்பு-தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளயாய் தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

முட்டை-2

உருளைக்கிழங்கு முட்டை பொரியல் செய்முறை விளக்கம்;

முதலில் 2 உருளைக்கிழங்கை சின்ன சின்ன துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய்விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பெருங்காயத்தூள் சிறிதளவு, பூண்டு 2 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு தேவையான அளவு, தண்ணீர் சிறிது ஊற்றி வேகவிடவும்.

இப்போது இதில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து முட்டை 2 சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு முட்டை பொரியல் தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT