Let's make a tasty coconut lemon rasam with eggplant Thokku... Image Credits: YouTube
உணவு / சமையல்

டேஸ்டியான தேங்காய் லெமன் ரசம் வித் கத்திரிக்காய் தொக்கு செய்யலாமா?

நான்சி மலர்

ன்றைக்கு டேஸ்டியான தேங்காய்ப்பால் லெமன் ரசம் மற்றும் சுவையான கத்தரிக்காய் தொக்கு ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேங்காய் லெமன் ரசம் செய்ய தேவையான பொருட்கள்.

தக்காளி-1

துவரம் பருப்பு-1 கப்.

மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி.

பூண்டு-4

ரசப்பொடி-1 ½ தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

லெமன் சாறு-2 தேக்கரண்டி.

தேங்காய் பால்-1/2 கப்.

தாளிக்க,

தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிளிதளவு.

வரமிளகாய்-5

பெருங்காயத்தூள்- சிறிதளவு.

தேங்காய் லெமன் ரசம் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி 1, வேக வைத்த துவரம் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் தக்காளி வெந்து நன்றாக கொதித்து வரும் பொழுது பொடியாக நறுக்கிய பூண்டு 4, ரசப்பொடி 1 ½ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

எழுமிச்சை பழச்சாறு 2 தேக்கரண்டி, தேங்காய் பால் ½ கப் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ரசத்தை இறக்கி வைத்து விட்டு அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், வரமிளகாய் 5, கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து தாளித்து ரசத்துடன் சேர்த்து நன்றாக கிண்டி பறிமாறவும். சூப்பர் சுவையில் தேங்காய்ப்பால் லெமன் ரசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கத்திரிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கத்தரிக்காய்-6

தனியா-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

வெள்ளை எள்-1 தேக்கரண்டி.

பூண்டு-4

புளி- நெல்லிக்காய் அளவு.

பச்சை மிளகாய்-3

வரமிளகாய்-1

கருவேப்பிலை-சிறிதளவு.

கொத்தமல்லி-1 கைப்பிடி.

கல் உப்பு- ¾ தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 கைப்பிடி.

தாளிக்க,

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

கத்தரிக்காய் தொக்கு செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து அதில்  நறுக்கிய 6 கத்தரிக்காயை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே கடாயில் தனியா 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வெள்ளை எள் 1 தேக்கரண்டி, நெல்லிக்காய் அளவில் புளி, பூண்டு 4, பச்சை மிளகாய் 3, வரமிளகாய் 1 வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது எல்லாம் நிறம் மாறியதும் கடைசியாக 1 கைப்பிடி கொத்தமல்லியும், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துவிட்டு கல் உப்பு ¾ தேக்கரண்டி, வறுத்து வைத்திருக்கும் கத்தரியையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இப்போது அரைத்த பேஸ்ட்டை ஒரு பவுலில் மாற்றிவிட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை 1 கைப்பிடி சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளவும்.

இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்த தொக்கை இத்துடன் சேர்த்து 4 நிமிடம் பிரட்டிவிட்டு இறக்கிவிடவும். சூப்பர் டேஸ்டியான கத்தரிக்காய் தொக்கு தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை ப்ண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Motivational Quotes: உங்களை மனதளவில் வலிமையாக்கும் 12 மேற்கோள்கள்! 

இரவு உணவுக்குப் பின் செய்யக்கூடாத 6 தவறுகள் தெரியுமா?

செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க கார்போஹைட்ரேட்ஸ் தரும் 6 நன்மைகள்!

பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?

இந்தியத் திருமணங்களில் எதிர்காலம்… சுமையா? சுலபமா?

SCROLL FOR NEXT