இன்றைக்கு சுவையான ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபி பால முஞ்சலு மற்றும் ஆரோக்கியமான கருப்புகவுனி அரிசி லட்டு எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் என்று பார்ப்போம்.
பால முஞ்சலு செய்ய தேவையான பொருட்கள்.
பூரணம் செய்ய,
தேங்காய்-1/2 மூடி.
வெல்லம்-1 கப்.
நெய்-1 தேக்கரண்டி.
ஏலக்காய்-1 தேக்கரண்டி.
மாவு செய்ய,
அரிசி மாவு-1/2 கப்.
ரவை-1/2 கப்.
உப்பு- தேவையான அளவு.
பால்-1 ½ கப்.
சர்க்கரை-1கப்.
நெய்-2 தேக்கரண்டி.
ஏலக்காய்-சிறிதளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
பால முஞ்சலு செய்முறை விளக்கம்.
முதலில் மிக்ஸியில் ½ மூடி தேங்காவை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃ பேனை வைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வெல்லம் 1 கப் சேர்த்து நன்றாக கரைத்துவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அரைத்து வைத்த தேங்காயை அத்துடன் சேர்த்து ஏலக்காய் 1 தேக்கரண்டி, நெய் 1 தேக்ககண்டி சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை நன்றாக கிண்டி இறக்கவும். இப்போது தேங்காய் பூரணத்தை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் ½ கப் ரவை, ½ கப் அரிசி மாவு, உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பால் 1 ½ கப் சேர்த்து அத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தயார் செய்து வைத்திருக்கும் மாவையும் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது 2 தேக்கரண்டி நெய், ஏலக்காய் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது கையில் சிறிதளவு நெய்யை தடவிக்கொண்டு சிறிய அளவில் மாவை தட்டி அதில் பூரணத்தை வைத்து நன்றாக மூடிவிடவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். சுவையான பால முஞ்சலு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கருப்புகவனி அரிசி லட்டு செய்ய தேவையான பொருட்கள்.
கருப்புகவனி அரிசி-1 கப்.
பாதாம்-1/2 கப்.
முந்திரி-1/4 கப்.
வேர்க்கடலை-1/4 கப்.
வெல்லம்-1 கப்.
பேரிச்சம்பழம்-3
ஏலக்காய்-2
நெய்-2 தேக்கரண்டி.
கருப்புகவனி அரிசி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் கருப்பு கவுனி அரிசியை எடுத்து நன்றாக கழுவிவிட்ட பிறகு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அரிசி ஊறிய பிறகு எடுத்து ஒரு வெள்ளை துணியில் போட்டு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் ஊறவைத்து காய வைத்த கருப்புகவனி அரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ½ கப் பாதாம் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். வேர்க்கடலை ¼ கப், முந்திரி ¼ கப் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
முதலில் கவுனி அரிசியை மட்டும் 4 ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் வறுத்த பாதாம், முந்திரி, கடலை, ½ கப் வெல்லம், பேரிச்சம்பழம் 3 இத்துடன் கவுனி அரிசி அரைத்து வைத்ததையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை ஒரு பவுலில் மாற்றிவிட்டு 2 தேக்கரண்டி நெய்விட்டு லட்டுவாக பிடித்து வைக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்புகவுனி அரிசி லட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.