இன்றைக்கு தீபாவளி ரெசிபிஸ் பீட்ரூட் முறுக்கு மற்றும் மில்க் பர்பியை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம்னு பார்ப்போம்.
பீட்ரூட் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்;
பீட்ரூட்-1
பச்சை மிளகாய்-2
பூண்டு-4
கருவேப்பிலை-சிறிதளவு.
பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
முறுக்கு மாவு-2 கப்.
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
வெண்ணெய்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
பீட்ரூட் முறுக்கு செய்முறை விளக்கம்;
முதலில் மிக்ஸியில் தோல் சீவி சிறிதாக வெட்டி வைத்திருக்கும் பீட்ரூட் 1, பச்சை மிளகாய் 2, பூண்டு 4, கருவேப்பிலை சிறிதளவு, தண்ணீர் சிறிது விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் 2 கப் முறுக்கு மாவு, ¼ தேக்கரண்டி பெருங்காயத்தூள், ½ தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி வெள்ளை எள், 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
இப்போது அரைத்து வைத்த பீட்ரூட்டை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிருதுவாக மாவை தயார் செய்துக்கொள்ளவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி விட்டு அதில் சிறிது மாவை வைத்து நன்றாக எண்ணெய்யை கொதிக்கவிட்டு அதில் முறுக்கை அழகாக பிழியவும்.
நன்றாக வெந்ததும் திருப்பிவிட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் முறுக்கை எடுத்துவிடுங்கள். அவ்வளவு தான் சுவையான பீட்ரூட் முறுக்கு தயார். நீங்களும் இந்த தீபாவளிக்கு வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
மில்க் பர்பி செய்ய தேவையான பொருட்கள்;
பால் பவுடர்-2 கப்.
நெய்-3 தேக்கரண்டி.
சர்க்கரை-1கப்.
பாதாம், பிஸ்தா- தேவையான அளவு.
மில்க் பிர்பி செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பவுலில் 2 கப் பால் பவுடர் எடுத்துக் கொள்ளவும். இதில் 3 தேக்கரண்டி நெய் விட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு ஃபேனில் 1 கப் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அதில் 1 தேக்கரண்டி நெய் விட்டுக் கொள்ளவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதில் கலந்து வைத்திருக்கும் பால் பவுடரை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இப்போது ஒரு டிரேயில் நெய் தடவி விட்டு சின்னதாக நறுக்கி வைத்திருக்கும் பாதம், பிஸ்தாவை தூவி விட்டு அதில் கிண்டி வைத்திருக்கும் பர்பியை சேர்த்து சமன்படுத்தி விடவும்.
ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் டேஸ்டியான மில்க் பர்பி தயார். நீங்களும் இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.