இன்றைக்கு மொறு மொறு பீட்ரூட் சிப்ஸ் மற்றும் சுவையான சோமாஸ் ரெசிபிஸை எப்படி சுலபமாக வீட்டிலே செய்யலாம்னு பார்க்கலாம்.
பீட்ரூட் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்.
பெரிய பீட்ரூட்-1
அரிசி மாவு-4 தேக்கரண்டி.
கடலை மாவு-4 தேக்கரண்டி.
சோளமாவு-2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
பீட்ரூட் சிப்ஸ் செய்முறை விளக்கம்.
முதலில் பெரிய பீட்ரூட் ஒன்றை தோல் சீவி எடுத்துக்கொண்டு நீளவாக்கில் சின்ன சின்னதாக வெட்டிக்கொள்ளவும். இப்போது அதை ஒரு பவுலில் சேர்த்து அத்துடன் 4 தேக்கரண்டி அரிசி மாவு, 4 தேக்கரண்டி கடலைமாவு, 2 தேக்கரண்டி சோளமாவு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசையவும். பீட்ரூட் தண்ணீர் விடும் அதனால் நன்றாக முதலில் பிசைந்துவிட்டு 2 தேக்கரண்டி தண்ணீர்விட்டு பிசைந்துக்கொள்ளவும்.
இப்போது எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் பீட்ரூட்டை போட்டு நன்றாக கிரிஸ்பியாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான மொறு மொறு பீட்ரூட் சிப்ஸ் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சோமாஸ் செய்ய தேவையான பொருட்கள்.
மைதா-1கப்.
உப்பு-சிறிதளவு.
நெய்-1 தேக்கரண்டி.
ரவை-1கப்.
நெய்-1 தேக்கரண்டி.
தேங்காய்-1/4 கப்.
சர்க்கரை-1/2 கப்.
பொட்டுக்கடலை-1/4 கப்.
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
சோமாஸ் செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் 1 கப் மைதா மாவு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் உப்பு சிறிதளவு, நெய் 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். இதை அரைமணி நேரம் ஊறவிடவும்.
இப்போது ஒரு ஃபேனில் 1 கப் ரவை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே ஃபேனில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போதுக்கு பூரணத்திற்கு ½ கப் சர்க்கரையை பொடி செய்து பவுலில் சேர்த்துக்கொள்ளவும், வறுத்த ரவையை பொடி செய்து அதையும் சேர்த்துக்கொள்ளவும், பொட்டுக்கடலை ¼ கப்பையும் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவல், 1 தேக்கரண்டி ஏலக்காய்பொடி சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளவும்.
இப்போது மாவு சிறிது எடுத்து சப்பாத்தி போன்று திரட்டி அதில் பூரணத்தை சிறிது வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவி நன்றாக மூடிவைத்துவிடவும். இப்போது கடாயில் எண்ணெயை நன்றாக காயவைத்து அதில் இதைப்போட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு முறுகலாக எடுத்தால் ருசியான சோமாஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.