Coconut milk rice and coconut water idli recipes Image Credits: Youtube
உணவு / சமையல்

சுவையான தேங்காய்ப் பால் குஸ்கா-இளநீர் இட்லி செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்னைக்கு சுவையான தேங்காய்ப் பால் குஸ்கா மற்றும் இளநீர் இட்லி எப்படி வீட்டிலேயே சுலபமாக இந்த ரெசிபியை செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

தேங்காய்ப் பால் குஸ்கா செய்ய தேவையான பொருட்கள்;

முந்திரி-10

நெய்- தேவையான அளவு.

பட்டை-2

கிராம்பு-2

ஏலக்காய்-2

ஜீரகம்-1 தேக்கரண்டி.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-2

இஞ்சிபூண்டு விழுது-1 தேக்கரண்டி.

தேங்காய் பால்-2 கப்.

உப்பு- தேவையான அளவு.

அரிசி-1 கப்

தேங்காய்ப் பால் குஸ்கா செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் கடாயை வைத்து நெய் சிறிதளவு ஊற்றி முந்திரி 10 பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்.

இப்போது அத்துடன் பட்டை 2, கிராம்பு 2, ஏலக்காய் 2, ஜீரகம் 1 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தேங்காய் பால் 2 கப் உப்பு தேவையான அளவு சேர்த்து கிண்டி விடவும். இந்த கலவை நன்றாக கொதித்ததும், இத்துடன் அரிசி 1 கப் சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து அரிசி நன்றாக வெந்தும் இறக்கவும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் பால்  குஸ்கா தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிப்பியை டிரை பண்ணி பார்த்துட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.

இளநீர் இட்லி செய்ய தேவையான பொருட்கள்;

இட்லி அரிசி-1 கிலோ.

உளுந்து-200 கிராம்.

வெந்தயம்-1 தேக்கரண்டி.

இளநீர் தண்ணீர்- தேவையான அளவு.

தேங்காய் வழுக்கை- தேவையான அளவு.

எண்ணெய்- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்;

முதலில் 1 கிலோ இட்லி அரிசியை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு 3 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.

உளுந்து 200 கிராம், 1 தேக்கரண்டி  வெந்தயம் தண்ணீர் வைத்து கழுவிய பிறகு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் இளநீர் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

இப்போது ஊறவைத்த அரிசியுடன் இளநீர், தேங்காய் வழுக்கையையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த உளுந்து மாவையும், அரிசி மாவையும் ஒரே பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கையாலேயே நன்றாக கலந்து விடவும். மாவை 6 மணி நேரம் நன்றாக புளிக்க விடவும். மாவு நன்றாக புளித்ததும், இப்போது ஒரு கொட்டாங்குச்சியை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் விட்டு நன்றாக தடவி விட்டு அதில் செய்து வைத்திருக்கும் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் மிருதுவான மல்லிகைப்பூ போன்ற இளநீர் இட்லி தயார். நீங்களும் இந்த சுவையான ரெசிபியை வீட்டிலே டிரை பண்ணிப் பாத்துவிட்டு சொல்லுங்க.

சமைக்க வேண்டாம் மென்று தின்றாலே பலன் தரும் மூன்று இலைகள்...!

Biggboss 8: யார் கெத்து டாஸ்கில் கோட்டைவிட்ட ஆண்கள் அணி!

வைணவத்தைக் காக்க கண்களை இழந்த கூரத்தாழ்வான்!

உக்ரைனில் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

திருநெல்வேலி ஸ்பெஷல் மனோகரம், தேங்காய்ப் பால் முறுக்கு!

SCROLL FOR NEXT