சிதம்பரம் ஸ்பெஷல் முட்டை சட்னி மற்றும் தாளிச்ச தயிர் ரெசிபிஸ். இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சூப்பரான சைட் டிஷ்ஷாக இருக்கும். இதனுடைய சுவையும் அல்டிமேட்டாக இருக்கும். இந்த ரெசிபிஸை சிம்பிளா வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
முட்டை சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
முட்டை-2
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சை மிளகாய்-1
கருவேப்பிலை- தேவையான அளவு.
எண்ணெய்-4 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்- சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
மிளகாய்தூள்-1 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1 தேக்கரண்டி.
மிளகு பொடி-1 தேக்கரண்டி
முட்டை சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் 2 முட்டையை சேர்த்து அத்துடன் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, சிறிதாக நறுக்கிய தக்காளி 1, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 4 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, மிளகு பொடி 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதங்கியதும்.
கலக்கி வைத்திருந்த முட்டையை சேர்த்து அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து மெதுவாக கிண்டி முழுமையாக வேகுவதற்கு முன்பே எடுத்து விடவும். இதை சப்பாத்தி, தோசை, இட்லிக்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். சுவை வேற லெவலில் இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தாளிச்ச தயிர் செய்ய தேவையான பொருட்கள்.
தயிர்-2 கப்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
வெங்காயம்-1
தக்காளி-1
கடுகு-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1
வரமிளகாய்-2
பெருங்காயத்தூள்- சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
தாளிச்ச தயிர் செய்முறை விளக்கம்.
முதலில் புளிப்பில்லாத கெட்டி தயிர் இரண்டு கப் எடுத்து வைத்துக்கொள்ளவும். தயிருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, நறுக்கிய பச்சை மிளகாய் 1, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்றாக வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து ஒரு வதக்கு வதக்கியதும், கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து வதக்கி இறக்கிவிடவும்.
இதை அப்படியே தயிரில் சேர்த்து கலந்துவிட்டால் தாளிச்ச தயிர் தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பர் சுவையாக இருக்கும். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.