Ulundu laddu and corn pakoda Recipes Image Credits: YouTube
உணவு / சமையல்

சத்தான உளுந்து லட்டு மற்றும் கார்ன் பகோடா செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ்களான உளுந்து லட்டு மற்றும் கார்ன் பகோடாவை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உளுந்து லட்டு செய்ய தேவையான பொருட்கள்.

முழு உளுந்து-1 கப்.

அரிசி-2 தேக்கரண்டி.

நெய்-தேவையான அளவு.

முந்திரி-10.

வெல்லம்-3 தேக்கரண்டி.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

செய்முறை விளக்கம்.

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி 10 பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது முழு உளுந்து 1 கப், அரிசி 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதை மிக்ஸியிலே நன்றாக அரைத்துக் கொண்டு இத்துடன் வெல்லம் 3 தேக்கரண்டி, ஏலக்காய் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்திருக்கும் மாவை பவுலில் சேர்த்து அத்துடன் வறுத்து வைத்த முந்திரி 10 ஐ சேர்த்துக் கொள்ளவும். மாவில் சிறிது நெய் விட்டு பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான உளுந்து லட்டு தயார். நீங்களும் வீட்டிலே இதை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கார்ன் பகோடா செய்ய தேவையான பொருட்கள்.

ஸ்வீட் கார்ன் சோளம்-1

வெங்காயம்-2

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-3

கருவேப்பிலை- சிறிதளவு.

கொத்தமல்லி- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

கடலை மாவு- 1கப்.

அரிசி மாவு- 2 தேக்கரண்டி.

கார்ன் பகோடா செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் வேகவைத்து தனியாக உதிர்த்த சோளம் 1 கப் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம் 2, பொடியாக பச்சை மிளகாய் 3,  சிறிதாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, சீரகத்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இப்போது கடலை மாவு 1 கப், அரிசி மாவு 2 தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பகோடா பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறிது சிறிதாக மாவை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை விட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான். சுவையான கார்ன் பகோடா தயார். நீங்களும் இந்த ரெசிபியை செஞ்சிப் பார்த்துட்டு சொல்லுங்க.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT