samayal recipes... Image credit - youtube.com
உணவு / சமையல்

மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொட்டலம்- கத்தரிக்காய் பொடிக்கறி செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொட்டலம் மற்றும் கத்தரிக்காய் பொடிக்கறி ரெசிபிகளை வீட்டிலேயே சுலபமாக எப்படி  செய்யலாம் என்று பார்ப்போம்.

மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொட்டலம் செய்ய தேவையான பொருட்கள்.

உருளை-2கப்.

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

இஞ்சி-1 துண்டு.

பூண்டு-2

வெங்காயம்-1

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கடலைமாவு-2 தேக்கரண்டி.

தண்ணீர்-1 கப்.

உப்பு- தேவையான அளவு.

கொத்தமல்லி- சிறிதளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சிறிது ஊற்றி அதில் சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, சிறிதாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பூண்டு 2, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கி விட்டு இத்துடன் 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கிளறிய பிறகு தண்ணீர் 1 கப் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து மசித்து வைத்திருக்கும் உருளையை 2 கப் சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி சிறிது தூவி இறக்கவும். இப்போது இலையில் பொட்டலம் மடித்து அதில் செய்து வைத்த உருளையை வைத்து பொட்டலமாக மடித்து விடவும். அவ்வளவு தான். மதுரை ஸ்பெஷல் கிழங்கு பொட்டலம் தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

தேவையான பொருட்கள்!

கொத்தமல்லி விதை-1 தேக்கரண்டி.

பொடி செய்வதற்கு,

எண்ணெய்- சிறிதளவு.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கடலை-1 கைப்பிடி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வரமிளகாய்-5.

எள்-1 தேக்கரண்டி.

கத்தரிக்காய் செய்வதற்கு,

எண்ணெய்- சிறிதளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

கத்தரிக்காய்-2

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

புளி தண்ணீர்-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

கத்தரிக்காய் பொடிக்கறி செய்முறை விளக்கம்!

முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சிறிது ஊற்றி அதில் கொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலை 1 கைப்பிடி, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 5, எள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து எண்ணெய் சிறிது ஊற்றி கடுகு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, நீளமாக நறுக்கி வைத்த கத்தரிக்காய் 2, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் சிறிதளவு ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை இத்துடன் கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான். சுவையான கத்தரிக்காய் பொடிக்கறி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT