Pongal - pickles recipes Image credit - youtube.com
உணவு / சமையல்

அல்டிமேட் சுவையில் புதினா வெண்பொங்கல்-முருங்கைக்காய் ஊறுகாய் செய்யலாமா?

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான புதினா வெண்பொங்கல் மற்றும் முருங்கைக்காய் ஊறுகாய் ரெசிபியை ஈஸியா வீட்டிலே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

புதினா வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1கப்

பாசிப்பருப்பு-1/2 கப்.

தண்ணீர்-5கப்.

நெய்- தேவையான அளவு.

முந்திரி-10.

புதினா-1 கைப்பிடி.

பச்சைமிளகாய்-1

இஞ்சி-1 துண்டு.

சீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

புதினா வெண்பொங்கல் செய்முறை விளக்கம்:

முதலில் குக்கரில் 1 கப் பச்சரிக்கு ½ கப் பாசிப்பருப்பை சேர்த்து சூடாகும் வரை வறுத்துவிட்டு இதை கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்போது இதை குக்கரில் சேர்த்து அத்துடன் 5 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி நெய் சேர்த்து 4 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கைப்பிடி புதினா, பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஃபேனை வைத்து 5 தேக்கரண்டி நெய், உடைத்த முந்திரி 10, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி சேர்த்து பொதினா பேஸ்டை சேர்த்து நன்றாக தண்ணீர் சுண்டும் வரை வதக்கிக்கொள்ளவும்.

அரிசி,பருப்பை நன்றாக குழைய வேக வைத்ததுடன் உப்பு தேவையான அளவு, செய்த பொதினா பேஸ்ட்டை சேர்த்து கிளறிவிட்டு 1 தேக்கரண்டி நெய்விட்டு கிண்டி இறக்கினால் சுவையான புதினா வெண்பொங்கல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

முருங்கைக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய்-2

கடுகு-2 தேக்கரண்டி.

வெந்தயம்-1தேக்கரண்டி.

புளி-எழுமிச்சை பழ அளவு.

நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி.

ஊறுகாய் தாளிக்க,

காய்ந்த மிளகாய்-3

பூண்டு-10

கடுகு-1 தேக்கரண்டி.

நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி.

கருவேப்பிலை-தேவையான அளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கடுகு வெந்தய பொடி-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

முருங்கைக்காய் ஊறுகாய் செய்முறை விளக்கம்:

முதலில் 2 பெரிய முருங்கைக்காயை வெட்டி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து எடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். எழுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து கெட்டியான பேஸ்டை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஃபேனில் புளி பேஸ்ட்டை சேர்த்து 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டியான பதத்திற்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும். இப்போது  ஃபேனில் நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி சேர்த்துக்கொண்டு முருங்கைக்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துவிட்டு அதே எண்ணெய்யில் காய்ந்த மிளகாய் 3, கடுகு 1 தேக்கரண்டி, தட்டிய பூண்டு 10, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் 3 தேக்கரண்டி, வறுத்து அரைத்த கடுகு வெந்தயப்பொடி1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு, பொரிச்ச முருங்கைக்காயை சேர்த்து கலந்துவிட்டு புளி பேஸ்ட்டை சேர்த்து கடைசியாக வறுத்து வைத்திருக்கும் கருவேப்பிலை வரமிளகாய் கலவையை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இதை 5 மாதம் வரை சேமித்து பயன்படுத்தலாம் நல்ல சுவையாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT