Murungai keerai poori and Vegetable rice roti recipes Image Credits: Medium
உணவு / சமையல்

சத்தான முருங்கைக்கீரை பூரி-வெஜிடபிள் ரைஸ் ரொட்டி செய்யலாமா?

நான்சி மலர்

ன்னைக்கு மிகவும் சத்து நிறைந்த முருங்கைக்கீரை பூரி மற்றும் வெஜிடபிள் ரைஸ் ரொட்டியை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

முருங்கைக்கீரை பூரி செய்ய தேவையான பொருட்கள்;

முருங்கைக்கீரை-2 கைப்பிடி.

ஜீரகம்-2 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

கோதுமை மாவு-1கப்.

உப்பு- தேவையான அளவு.

ஓமம்-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

முருங்கைக்கீரை பூரி செய்முறை விளக்கம்;

முதலில் மிக்ஸியில் 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சுத்தம் செய்து சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் 2 பச்சை மிளகாய், 2 தேக்கரண்டி சீரகம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் 1கப் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 தேக்கரண்டி ஓமம் சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் அரைத்து வைத்த முருங்கை பேஸ்டை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். கடைசியாக 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தடவிவிட்டு 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். மாவை உருண்டைகளை சப்பாத்தி போல திரட்டி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், அதில் திரட்டி வைத்த மாவை போட்டு நன்றாக பூரி பொரிந்துவர விட்டு இரண்டு  பக்கமும் திருப்பி வேக வைத்து எடுக்கவும். இதனுடன் மிக்ஸ்ட் வெஜிடபிள் குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும். கண்டிப்பாக வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

வெஜிடபிள் ரைஸ் ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்;

சுரைக்காய்-2கப்.

கேரட்-1கப்.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-1

இஞ்சி-1துண்டு.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

அரிசிமாவு-1கப்.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

இப்போது ஃபேனில்,

கடுகு-சிறிதளவு.

வெள்ளை எள்-சிறிதளவு.

ஜீரகம்-சிறிதளவு.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

நெய்-1 தேக்கரண்டி.

வெஜிடபிள் ரைஸ் ரொட்டி செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் சுரைக்காய் துருவியது 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு துருவியது, கேரட் துருவியது 1 , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 எல்லாவற்றையும் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இதனுடன் ஜீரகம்1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து விட்டுவிடவும். இத்துடன் 1 கப் அரிசி மாவு சேர்த்துவிட்டு கலந்துவிட்டுக் கொண்டு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஃபேனில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துவிட்டு கடுகு சிறிதளவு, ஜீரகம் சிறிதளவு, வெள்ளை எள் சிறிதளவு சேர்த்து வெடித்ததும் நன்றாக ஃபேன் முழுக்க பரப்பி விட்டு அதில் 2 கரண்டி மாவை எடுத்து விட்டு நன்றாக பரப்பி விட்டுக் கொள்ளவும். மூடி போட்டு இரண்டு நிமிடம் வேகவைத்த பிறகு நெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து திருப்பி போட்டு நன்றாக வேகவைத்த பிறகு தட்டில் வைத்து சட்னியுடன் சேர்த்து பரிமாறவும். சூப்பர் டேஸ்டான வெஜிடபிள் ரைஸ் ரொட்டி தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT