Nungu paya and soya cheese balls recipes Image Credits:YouTube
உணவு / சமையல்

அல்டிமேட் சுவையில் நுங்கு பாயா-சோயா சீஸ் பால்ஸ் செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பாரம்பரிய உணவுகளுள் பாயாவும் ஒன்றாக உள்ளது. பண்டிகை ளுக்கும், திருவிழாவிற்கும் பாயா கண்டிப்பாக இருக்கும். இந்த பாயாவின் வெஜிடேரியன் வெர்ஷனான நுங்கு பாயாவை இன்றைக்கு செய்யலாம் வாங்க.

நுங்கு பாயா செய்ய தேவையான பொருட்கள்;

நுங்கு-5

எண்ணெய்-2 தேக்கரண்டி.

பட்டை-1

பிரியாணி இலை-1

கிராம்பு-1

வெங்காயம்-1

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

பச்சை மிளகாய்-2

பேஸ்ட் செய்வதற்கு,

தேங்காய்-1கப்.

முந்திரி-10

சோம்பு-1தேக்கரண்டி.

கசகசா-1தேக்கரண்டி.

பட்டை-2

கிராம்பு-2

ஏலக்காய்-2

கொத்தமல்லி, புதினா- சிறிதளவு.

எழுமிச்சை சாறு-சிறிதளவு.

நுங்கு பாயா செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது உப்பு சேர்த்துவிட்டு நன்றாக தோலுரித்த நுங்கு 4  தண்ணீரிலே வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் பட்டை 1, கிராம்பு 1, பிரியாணி இலை 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 2, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் 1கப் தேங்காய், முந்திரி 10, சோம்பு 1 தேக்கரண்டி, கசகசா 1 தேக்கரண்டி, பட்டை 2, கிராம்பு 2, ஏலக்காய் 2 சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து அதையும் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது அந்த கலவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த நுங்கை அதில் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். பிறகு மேலே கொத்தமல்லி, புதினா சிறிது சேர்த்து எழுமிச்சை சாறு சிறிது பிழிந்து கலக்கிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான். சுவையான நுங்கு பாயா தயார். இதை இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிடும்போது வேற லெவலில் இருக்கும். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

சோயா சீஸ் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள்;

மீல் மேக்கர்-1கப்.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-1

கொத்தமல்லி – சிறிதளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

பிரட்-4

மைதா-3 தேக்கரண்டி.

சீஸ்- தேவையான அளைவு.

எண்ணெய்- தேவையான அளவு.

சோயா சீஸ் பால்ஸ் செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் மீல் மேக்கர் 1 கப் எடுத்துக்கொண்டு அதில் 1 கப் சுடுத்தண்ணீரை சேர்த்து 15 நிமிடம் வைக்கவும். இப்போது சோயா நன்றாக வெந்திருக்கும். அதை மட்டும் நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது மீல் மேக்கரை மிக்ஸியில் போட்டு அத்துடன் வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, கரம் மசாலா 1 தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது பிரெட் 4 எடுத்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு அதை ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் மைதா 3 தேக்கரண்டி, உப்பு சிறிது, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்திருக்கும் சோயாவில் 3 தேக்கரண்டி பிரட் கிராம்ஸ்ஸை சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டு குட்டியாக தட்டி அதனுள் சீஸ்ஸை வைத்து பால்கள் போல உருட்டி விடவும். இதை மைதா கலவையில் முக்கி பிரெட் கிராம்ஸ்ஸில் உருட்டி எண்ணெய்யில் போட்டு நன்றாக பொன்னிமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சோயா சீஸ் பால்ஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT