பச்சைப்பயிரில் நிறைய விட்டமின்கள் உள்ளது. இது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். இது உடல் பருமனை குறைக்க உதவும், உடலில் உள்ள சக்கரை நோயின் அளவை குறைக்க உதவும். இத்தகைய சிறப்புடைய பச்சைப்பயிரை வைத்து ஒரு சூப்பரான ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.
முந்திரி கொத்து செய்ய தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிர்-1 கப்.
ஏலக்காய்-3
வெல்லம்-1 கப்.
துருவிய தேங்காய்-1 கப்.
நெய்-1 தேக்கரண்டி.
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
மஞ்சள் தூள்-1/4தேக்கரண்டி.
அரிசி மாவு- 2 கப்.
மைதா மாவு- ¼ கப்.
முந்திரி கொத்து செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு ஃபேனில் 1 கப் பச்சை பயிரை நன்றாக வறுத்துவிட்டு அத்துடன் 3 ஏலக்காய் சேர்த்து வறுத்தெடுத்து மிக்ஸியில் மாவாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
இப்போது ஃபேனில் 1கப் தேங்காயில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கோல்டன் பிரெவுன் நிறத்தில் வறுத்து எடுத்து கொள்ளவும். இப்போது வறுத்து வைத்த தேங்காய், வெள்ளை எள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக. கலந்து வைத்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து வெல்லம் 1 கப், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாவு பதம் வந்ததும் இறக்கி மாவில் சேர்த்து நன்றாக கலக்கி உருண்டை பிடித்து வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவு, ¼ கப் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது 3 உருண்டையை எடுத்து மாவில் போட்டு நன்றாக மாவு அதன் மேல் பட்டதும் 3 உருண்டையும் சேர்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான முந்திரி கொத்து தயார். நீங்களும் வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.
பேபி கார்ன் 65 செய்ய தேவையான பொருட்கள்;
பேபி கார்ன்-10
மைதா- 4 தேக்கரண்டி.
சோளமாவு-2 தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.
மிளகு தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
எழுமிச்சை சாறு-1மூடி
பிரட் கிரம்ஸ்- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
பேபி கார்ன் செய்முறை விளக்கம்;
முதலில் 10 பேபிகார்னை தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 4 தேக்கரண்டி மைதா, 2 தேக்கரண்டி சோளமாவு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி கரம் மசாலா, ½ தேக்கரண்டி மிளகு தூள், தேவையான அளவு உப்பு, கடைசியாக ஒரு மூடி எலுமிச்சைசாறு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கி எடுத்து கொள்ளவும்.
இப்போது வேக வைத்திருக்கும் பேபி கார்னை நீளவாட்டில் வெட்டி எடுத்து அதை இந்த கலவையில் பொட்டு எடுத்து அதை பிரட் கிரம்ஸ்ஸில் பிரட்டி எண்ணெய்யில் போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவவ்ளவு தான் சுவையான பேபிகார்ன் 65 ஹோட்டல் ஸ்டைலில் தயார். நீங்களும் வீட்டிலே ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.