Chutney Recipes Image Credits: Swathi's Recipes
உணவு / சமையல்

தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ட்னி வகை இந்தியாவிலே உருவானதாகும். காய்கறி, பழங்களுடன், மசாலாக்களை சேர்த்து அரைக்கப்படுவது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலத்தில் தேங்காய் சட்னி மிகவும் பிரபலமாகும். இட்லி, வடை, தோசையுடன் தொட்டு சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். இன்றைக்கு தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூ. சட்னி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

தெக்கத்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய்-5

வெங்காயம்-1

கருவேப்பிலை-சிளிதளவு.

பூண்டு-5

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

கடுகு-சிறிதளவு.

கடலை பருப்பு-1/4கிலோ.

புளி-20 கிராம்.

தெக்கத்து சட்னி செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி 5 மிளகாய், வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு , கொத்தமல்லி சிறிதளவு, புளி 20 கிராம், உப்பு சிறிதளவு சேர்த்து வதக்கி இறக்கி வைத்து விடவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பை நன்றாக பொரித்து எடுத்து கொள்ளவும்.

இவை இரண்டையும் ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளலாம். இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வரமிளகாய் 2, கருப்பிலை சிறிது சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கிண்டவும். அவ்வளவுதான் சுவையான தென்னகத்து சட்னி அல்லது சமோசா சட்னி தயார். இதை சமோசாவிற்கு தொட்டு சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

பீட்ரூட் சட்னி செய்ய தேவையான பொருட்கள்;

உளுந்து-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

வர மிளகாய்-3

கடலை பருப்பு-1 தேக்கரண்டி.

பீட்ரூட்-2

இஞ்சி -1 துண்டு.

புளி- எழுமிச்சை சைஸ்.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

கடுகு- சிறிதளவு.

பெருங்காய தூள் சிறிதளவு

பீட்ரூட் சட்னி செய்முறை விளக்கம்;

ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி எண்ணெய் உற்றி கொண்டு 1 தேக்கரண்டி உளுந்து, 1 தேக்கரண்டி கடலை பருப்பு, வரமிளகாய் 2, பச்சை மிளகாய்-2 புளி எழுமிச்சை சைஸ், இஞ்சி 1 துண்டு, 2 பீட்ரூட்டை சிறிதாக வெட்டி கலந்து கொள்ளவும்.  நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், வரமிளகாய் 1 ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்டினியில் கொட்டி கிண்டவும். இப்போது சுவையான பீட்ரூட் சட்னி தயார். சப்பாத்தி, பூரி,தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். நீங்களும் இந்த சட்னி வகைகளை வீட்டிலே செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT