இன்றைக்கு சுவையான குழந்தைகள் ஃபேவரைட் சாக்லேட் கொழுக்கட்டை மற்றும் பான் லட்டு ரெசிபிஸ் வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம் என்று பார்ப்போம்.
சாக்லேட் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்.
தண்ணீர் -1 ½ கப்.
சர்க்கரை-2 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
நெய்-1 தேக்கரண்டி.
கொழுக்கட்டை மாவு-1 கப்.
கொக்கோ பவுடர்-1 தேக்கரண்டி.
பூரணம் செய்ய,
பாதாம்-5
பிஸ்தா-5
வால்நட்-5
முந்திரி-5
Desiccated Coconut-1/2 கப்.
Condensed milk-3 தேக்கரண்டி.
சாக்லேட் துண்டு-தேவையான அளவு.
சாக்லேட் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து 1 ½ கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டுக்கொள்ளவும்.
இப்போது 1 கப் கொழுக்கட்டை மாவை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதில் 1 தேக்கரண்டி கொக்கோ பவுடர் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக கலந்துவிட்டு கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்து மாவை பிசைந்துக்கொள்ளவும். கடைசியாக 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து சிம்மில் வைத்துக்கொள்ளவும். அதில் பாதாம் 5, முந்திரி 5, வால்நட் 5, பிஸ்தா 5 ஆகியவற்றை பொடியாக நறுக்கி வறுத்துக் கொள்ளவும் இத்துடன் ½ கப் Desiccated coconut சேர்த்து வறுத்துக் கொள்ளவும். கடைசியாக 3 தேக்கரண்டி Condensed milk சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவு தான் பூரணம் தயார்.
இப்போது கொழுக்கட்டை அச்சில் நெய்யை தடவிக்கொண்டு மாவை வைத்துவிட்டு மூடி பூரணத்தை உள்ளே வைத்து சாக்லேட் துண்டு சிறிது சேர்த்து மூடிவிடவும். இப்போது இந்த கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கொழுக்கட்டை தயார். நீங்களும் வீட்டில் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பான் லட்டு செய்ய தேவையான பொருட்கள்.
வெற்றிலை-5
Condensed milk-1 கப்.
நெய்-1 தேக்கரண்டி.
Desiccated coconut-1/2 கப்.
பூரணம் செய்ய,
குல்கந்த்-2 தேக்கரண்டி.
டூட்டி ப்ரூட்டி-2 தேக்கரண்டி.
வறுத்து அரைத்த சோம்பு+சர்க்கரை-2 தேக்கரண்டி.
பான் லட்டு செய்முறை விளக்கம்.
முதலில் 5 வெற்றிலையை நன்றாக கழுவிவிட்டு அதை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் 1 கப் Condensed milk சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 1 தேக்கரண்டி நெய் சேர்த்து 1 ½ கப் Desiccated coconut ஐ சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இப்போது இதில் அரைத்து வைத்திருக்கும் வெற்றிலை கலவையை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி குல்கந்த், 2 தேக்கரண்டி டூட்டி ப்ரூட்டி, வறுத்து அரைத்த சோம்புடன் சர்க்கரை 2 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது செய்து வைத்திருக்கும் லட்டுவிற்கு நடுவிலே குல்கந்த் பூரணத்தை உள்ளே வைத்து நன்றாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். கடைசியாக Desiccated Coconut ல் உருட்டி எடுத்தால் சுவையான பான் லட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.