Magic Drink
Magic Drink 
உணவு / சமையல்

கிட்னி கல்லை வெளியேற்றும் Magic Drink ரெசிபி! 

கிரி கணபதி

சிறுநீரகக் கல் பிரச்சனை என்பது தற்போதைய காலத்தில் மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. மாறிவிட்ட வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கங்களினால் சிறுநீரகக் கல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை சரி செய்வதற்கு எவ்வளவுதான் செலவு செய்தாலும் சிலருக்கு குணமாவதில்லை. ஆபரேஷன் செய்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற நிலையை அடைகின்றனர். ஆனால் சில எளிய வீட்டு வைத்திய முறையிலேயே சிறுநீரகக் கற்களை வெளியேற்ற முடியும். இந்தப் பதிவில் அதற்கான மேஜிக் ட்ரிங்க் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

Drink 1:- 

தேவையான பொருட்கள்: 

  • ஆப்பிள் 1

  • புதினா சிறிதளவு

  • இஞ்சி சிறு துண்டு

  • வெள்ளரிக்காய் 1

  • உப்பு ¼ ஸ்பூன்

  • மஞ்சள் ¼ ஸ்பூன்

செய்முறை: 

முதலில் ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி, அதில் ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, புதினா இலைகள் ஆப்பிள் மற்றும் வெள்ளரித் துண்டுகளை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளுங்கள். இப்படி தினசரி செய்து ஒரு மாதத்திற்கு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியே வந்துவிடும். 

Drink 2:- 

தேவையான பொருட்கள்: 

  • வாழைத்தண்டு 1 துண்டு

  • மிளகு ½ ஸ்பூன்

  • சீரகம் ½ ஸ்பூன்

செய்முறை: 

முதலில் வாழைத்தண்டை நன்கு கழுவி அதை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். 

நறுக்கிய வாழ்க்கைத் தண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து, மிளகு மற்றும் சீரகத்தைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கிளாசில் வடிகட்டி அவ்வப்போது குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் விரைவில் வெளியேறும். 

சிறுநீரக கல் பாதிப்பு இருக்கும் அனைவருமே இந்த இரண்டு பானங்களையும் முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே நாள்பட்ட உடல் சுகாதார நிலைமைகளை சந்தித்து வருபவர்கள், தக்க மருத்துவர்களின் ஆலோசனை பேரில் இவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. எந்த வீட்டு வைத்திய முறையாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை பேரில் முயற்சிப்பது அவசியம். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பானங்களும் இயற்கையானது என்பதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தைரியமாக அருந்தலாம்.  

சல்மான் கானுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா! எந்த படத்தில் தெரியுமா?

ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!

பதட்டத்தை தவிர்க்க பக்கவான 10 வழிகள்!

ஆடைகளை எப்பொழுதும் புதுசு போல வைத்திருக்க வேண்டுமா? அதற்கான வழிகள் என்னென்ன?

வாராணசியில் மே 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் பிரதமர் மோதி!

SCROLL FOR NEXT