மீல் மேக்கர் குருமா
மீல் மேக்கர் குருமா 
உணவு / சமையல்

சுவையில் அள்ளும் 'மீல் மேக்கர்' குருமா!

தனுஜா ஜெயராமன்

தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் – 1 கப்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* கிராம்பு – 4

* பட்டை – 1 இன்ச்

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

* பட்டை – 1 இன்ச்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

நாம் பல விதமான குருமாவை செய்து பார்ப்பதுண்டு அதில் காய்கறி குருமா, காராமணி குருமா, மொச்சை குருமா, பனீர் குருமா, காளான் குருமா போன்ற சைவ குருமா வகைகளை செய்து பார்ப்போம். அசைவ பிரியர்கள் ஏராளமான அசைவ வகை குருமாகளை செய்வார்கள். சைவ பிரியர்களின் குறையை போக்க வந்ததே இந்த மீல் மேக்கர் குருமா. சுவையில் அசைவ குருமாவை போல இருக்கும் மீல் மேக்கர் ஒரு சைவ வகை குருமா. இதன் செய்முறையை பார்க்கலாம்.

* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை நன்கு அலசி, அதிகப்படியான நீரை கையால் பிழிந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீபூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

குருமா

* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட்டு, துருவிய தேங்காயை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி இறக்கி, குளிர வைக்கவும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு கடாயில் அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, சீரகம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் குருமா ரெடி.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT